Thursday, August 6, 2026
No menu items!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்

SJB தலைவர் பதவியில் இருந்து விலகியுள்ள இம்தியாஸ் பக்கீர் மார்கர்!

சமகி ஜன பலவேகய (SJB) தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான இம்தியாஸ் பக்கீர் மார்கர், சமகி ஜன பலவேகய (SJB) தலைவர் பதவியில் இருந்து விலகியுள்ளார். வட்டாரங்களின்படி, அவர் கட்சியின் உறுப்பினராக இருந்து கொண்டே தலைவர் பதவியில் இருந்து விலகியுள்ளார். அவரது இராஜினாமாவிற்கான சரியான காரணம் இன்னும் தெரியவில்லை. டிசம்பரில், இம்தியாஸ் பக்கீர் மார்க்கர், கட்சித் தலைமையிடம், எஸ்.ஜே.பி-யின்...

SLPP இல் மீண்டும் இணைந்துள்ள லோகன் ரத்வத்தே!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லோகன் ரத்வத்தே, 2025 உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்காக இலங்கை பொதுஜன பெரமுனவில் (SLPP) மீண்டும் இணைந்துள்ளார். முன்னதாக, 2024 ஜனாதிபதித் தேர்தலில் தேசிய ஜனநாயக முன்னணி (NDF) வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கேவுக்கு ஆதரவளிக்க ரத்வத்தே SLPP-யிலிருந்து வெளியேறினார், அதே நேரத்தில் அவர் பொதுத் தேர்தலிலும் போட்டியிடவில்லை. இருப்பினும், திங்கட்கிழமை (மார்ச் 11) கண்டியில்...

தேசிய மக்கள் சக்தியினால் தமிழ் மக்களுக்கான தீர்வினை வழங்க முடியாது; சி.வி.விக்னேஷ்வரன்!

சிங்கள ஆதிக்கத்திலிருந்து விடுபட்டுத் தமிழ் மக்களுக்கான ஒரு தீர்வினை தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் வழங்க முடியாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஷ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று செய்தியாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மாறுபட்டதொரு இடதுசாரி கொள்கையைக் கொண்டுள்ள ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கு தமிழ் மக்களின் ஆதரவு தொடர்ந்தும் கிடைக்குமென்று எதிர்பார்க்க முடியாதென...

உள்ளூர் அதிகாரங்களைக் கட்டாயம் NPPயிடம் கொடுக்க வேண்டிய தேவையில்லை; எம்.ஏ சுமந்திரன்!

உள்ளூர் அதிகாரங்களைக் கட்டாயம் தேசிய மக்கள் சக்தியிடம் கொடுக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார். உள்ளூர் அதிகாரங்களை மற்றவர்களுக்குத் தாரைவார்த்துக் கொடுக்க தயார் இல்லை என சுமந்திரன் கூறினார். யாழ் வடமராட்சி ஊடக இல்லத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தார். நாட்டில்...

செல்வராசா கஜேந்திரன் மற்றும் வேலன் சுவாமிகளுக்கு பொலிஸார் அழைப்பு!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், தவத்திரு வேலன் சுவாமிகள் ஆகியோரிடம் வாக்குமூலம் பெறுவதற்காக பலாலி பொலிஸாரால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் திஸ்ஸ விகாரையை அகற்றக் கோரி நடத்திய போராட்டம் தொடர்பாக வாக்குமூலத்தை பதிவு செய்வதற்காக பொலிஸார் அவர்கள் இருவரையும் அழைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, பலாலி பொலிஸ் நிலையத்தில் இன்று (20/02/2025) நண்பகல்...

இலங்கை தமிழரசு கட்சியின் பதில் பொதுச் செயலாளராக சுமந்திரன் நியமனம்..!

இலங்கை தமிழ் அரசு (ITAK) கட்சியின் பதில் பொதுச் செயலாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று ஞாயிற்றுக்கிழமை (16/02/2025) நடைபெற்ற கட்சியின் மத்திய குழு கூட்டத்தின் முடிவின்படி இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த நியமனம் செய்யப்பட்டதாக இலங்கைத் தமிழ் அரசு கட்சி தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைக்க நடவடிக்கை!

அரசாங்கத்திற்கு எதிரான அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைக்க நடவடிக்கை எடுப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில், வேறுபல கட்சிகளின் பிரதிநிதிகளின் பங்கேற்புடன் நேற்று கொழும்பில் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இந்தக் கலந்துரையாடலில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் கலந்து...

சுவிட்சர்லாந்து தூதுவரை சந்தித்த சஜித் பிரேமதாச!

இலங்கை மற்றும் மாலைதீவுக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் கலாநிதி சிறி வோல்ட்க்கும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் இடையில் விஷேட சந்திப்பொன்று நடைபெற்றது . இந்த சந்திப்பானது கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது. சுவிட்சர்லாந்து போலவே தமது நாட்டிலும் புதுப்பிக்கத்தக்க வலுச்சக்தியை மேம்படுத்துவதற்குத் தேவையான ஒத்துழைப்பை வழங்குமாறு சுவிட்சர்லாந்து தூதுவரிடம் எதிர்க்கட்சி தலைவர் கேட்டுக்கொண்டார். இந்த சந்திப்பில் ஐக்கிய...

இலங்கை தமிழரசு கட்சியின் மூத்த தலைவர்  மாவை சேனாதிராஜா  காலமானார்!

இலங்கை தமிழரசு கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தமது 82வது வயதில் காலமானார். தலையில் ஏற்பட்ட இரத்த கசிவு காரணமாக அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்குச் செயற்கை சுவாசம் வழங்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா நேற்றிரவு (29) காலமானார். இறுதிக்கிரியைகளை மாவிட்டபுரத்தில் நடத்துவதற்குத்...

மீண்டும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட துமிந்த சில்வா..!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா திடீர் சுகவீனம் காரணமாக வெலிக்கடை சிறைச்சாலை மருத்துவமனையில் இருந்து கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறைச்சாலைகள் திணைக்களத்தின் மூத்த அதிகாரி ஒருவர் இதனை குறிப்பிட்டுள்ளார். துமிந்த சில்வா நேற்று முன்தினம் (10) இரவு சுகவீனம் காரணமாக வெலிக்கடை சிறைச்சாலை மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டதாகவும், பின்னர் அவரது உடல்நிலை மோசமடைந்ததால்...
- Advertisement -spot_img

Latest News

நாட்டில் 24 சட்டவிரோத சூதாட்ட இணையத்தளங்கள் முடக்கம்

தேவையான அனுமதிப் பத்திரங்கள் இன்றி செயல்படும் 24 சட்டவிரோத சூதாட்ட இணையத்தளங்களுக்கான அணுகலை இலங்கை முடக்கியுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சு அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கை இலங்கை தொலைத்தொடர்புகள்...
- Advertisement -spot_img