Thursday, August 6, 2026
No menu items!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்

சாதாரண அறைக்கு மாற்றப்பட்ட துமிந்த சில்வா..!

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் இருந்து சிறைச்சாலையில் உள்ள சாதாரண அறைக்கு மாற்றப்பட்டுள்ளார். நேற்று (ஜனவரி 10) பிற்பகல் அவர் சாதாரண அறைக்கு மாற்றப்பட்டதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் காமினி பி. திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார். துமிந்த சில்வா சில காலம் சிறைச்சாலை வைத்தியசாலையில் மருத்துவ ஆலோசனையின் பேரில்...

கடமைகளைப் பொறுப்பேற்ற தலதா அத்துகோரள!

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள இன்று (10) தமது கடமைகளைப் பொறுப்பேற்றார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் கடமைகளைப் பொறுப்பேற்றார் முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க அண்மையில் தலதா அத்துகோரளவை இந்தப் பதவிக்கு நியமித்தார் இந்தப் பதவியை முன்னதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்...

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கூட்டணியிட இருக்கும் 5 கட்சிகள்..!

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் 5 கட்சிகளும் ஒன்றிணைந்து போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்ட குழுக் கூட்டம் வவுனியா - கோவில்குளம் பகுதியில் அமைந்துள்ள தனியார் விடுதியில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்த ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் ஊடகப் பேச்சாளரும்,...

ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய பொதுச் செயலாளர்-ரணில் விக்கிரமசிங்கவினால் நியமனம்..!

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக கட்சியின் தலைவர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் காலமானார்..!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.ஆர்.பி.சூரியப்பெரும நேற்று வியாிக்கிழமை (02) காலமானார். 1928 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 8ஆம் திகதி பிறந்த அவர் தனது 96 வயதில் இன்று காலமானர். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளராக நீண்ட காலம் பதவி வகித்த அவர், 2010-2015 காலப்பகுதியில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தி தேசியப் பட்டியல் ஊடாக...

உணவுப் பொருட்களுக்கு பாரிய பிரச்சினைகள்-சம்பிக்க ரணவக்க தெரிவிப்பு..!

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் உட்பட பல்வேறு பொருட்களின் விற்பனை விலையில் பாரிய பிரச்சினைகள் காணப்படுவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (02) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துரைக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அரிசி, பருப்பு, வெள்ளைப்பூடு, உருளைக்கிழங்கு, உப்பு, தேங்காயெண்ணெய் உள்ளிட்ட 63 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இறக்குமதியின்...

இலங்கை தமிழரசு கட்சியின் அதிரடி முடிவு..!

தேர்தல் காலங்களில் கட்சியின் தீர்மானத்திற்கு எதிராகக் கருத்துக்களை வெளியிட்டவர்கள் மற்றும் சேறுபூசும் நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் தொடர்பில் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் நேற்றைய தினம் வவுனியாவில் இடம்பெற்றது. இதன்போது, பல ஒழுக்காற்று நடவடிக்கைகள் தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை தமிழரசு...

அரசியலில் இருந்து ஓய்வு பெறும் சமகி ஜன பலவேகய உறுப்பினர்..!

களுத்துறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு.லலித் எல்லாவல இன்று முதல் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளார். “1989ஆம் ஆண்டு அரசியலில் பிரவேசித்து, பின்னர் எதிர்க்கட்சித் தலைவராகி, தலைவரானார், இலங்கையின் சிறந்த உள்ளூராட்சி சபையாக பண்டாரகம உள்ளூராட்சி சபையை உருவாக்கி, 10 வருடங்கள் மாகாண சபை உறுப்பினராகப் பணியாற்றி, நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றினேன். நான்கு...

நாடாளுமன்றத்துக்குப் பிரவேசித்த குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகள்..!

குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகள் நேற்று நாடாளுமன்றத்துக்குப் பிரவேசித்து மூன்று நாடாளுமன்ற அதிகாரிகளிடம் விசாரணைகளை முன்னெடுத்தனர். நாடாளுமன்றத்தின் இணையத்தளத்தில் தமது பெயருக்கு முன்னதாக கலாநிதி என்ற பட்டம் இடப்பட்டிருந்தமை தொடர்பில் நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார அண்மையில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடொன்றைப் பதிவு செய்திருந்தார். இது தொடர்பில் நாடாளுமன்றத்தின் உதவிச் செயலாளர் நாயகம், நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களத்தின் பதில் பணிப்பாளர்...

பார் போமிட் சர்ச்சை தொடர்பில் சுமந்திரன் அதிரடி அறிவிப்பு..!

பார் போமிட் வழங்குவதற்குச் சிபார்சு செய்தவர்களும் சபாநாயகர் பதவி விலகியது போன்று பதவி விலக வேண்டும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். சபாநாயகர் பதவி விலகியமை தொடர்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், “சபாநாயகர் கலாநிதிப் பட்டம் தனக்கு இருக்கின்றது,...
- Advertisement -spot_img

Latest News

நாட்டில் 24 சட்டவிரோத சூதாட்ட இணையத்தளங்கள் முடக்கம்

தேவையான அனுமதிப் பத்திரங்கள் இன்றி செயல்படும் 24 சட்டவிரோத சூதாட்ட இணையத்தளங்களுக்கான அணுகலை இலங்கை முடக்கியுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சு அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கை இலங்கை தொலைத்தொடர்புகள்...
- Advertisement -spot_img