Monday, June 15, 2026
No menu items!

மேலதிக சிகிச்சை

நபரொருவருக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவால்  கட்டுநாயக்காவில் அவசரமாக தரையிறக்கப்பட்ட  விமானம்!

டுபாயிலிருந்து அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நோக்கிப் புறப்பட்டிருந்த எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் EK-434 விமானம் நேற்று (20) இரவு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கியது. விமானத்தில் பயணித்த ஒருவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் இந்த அவசரத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்தப் பயணி தரையிறங்கியவுடன் உடனடியாக மேலதிக சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உலகின்...

ஏ-9 வீதியில் இடம்பெற்ற கோர விபத்து- ஒருவர் பலி!

யாழ்ப்பாணம் - கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏ-9 வீதியின் மிருசுவில் பகுதியில்   மூன்று வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் மூவர் படுகாயமடைந்தனர். இச் சம்பவமானது நேற்று (10) இரவு இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி திசையிலிருந்து யாழ் திசை நோக்கி பயணித்த காரும் - யாழ் திசையிலிருந்து கிளிநொச்சி திசை நோக்கிப்...

பேருந்து விபத்து; 14 பேர் காயம்!

காத்தான்குடியிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த பேருந்தொன்று, சேருநுவர - கந்தளாய் வீதியில், சேருநுவர கல்லாறு இராணுவ முகாமுக்கு அருகில் விபத்துக்குள்ளானது. குறித்த விபத்தில் சுமார் 14 பேர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். பேருந்து வேகக்கட்டுப்பாட்டை இழந்த நிலையில் வீதியை விட்டு விலகி மரமொன்றுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் காயமடைந்த 14 பேர் சிகிச்சைக்காக சேருநுவர வைத்தியசாலையில்...

சாரதியின் தூக்கத்தினால் ஏற்பட்ட விபத்து 7 பேர் காயம்!

கட்டுவன – வலஸ்முல்லை பிரதான வீதியில் கெப் வண்டியொன்று விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த ஏழு பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்த விபத்து இன்று (26) அதிகாலை 3.40 மணியளவில் இடம்பெற்றுள்ளது. மாகந்துர பெரகம சன்ரைஸ் தேயிலை தொழிற்சாலையில் பணிபுரிந்த பதினொரு பணிப்பெண்களை கட்டுவன பகுதிக்கு ஏற்றிச் சென்றபோது சாரதிக்கு தூக்கம் காரணமாக வாகனம் விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். காயமடைந்தவர்கள் கட்டுவன...

மாமன் மருமகனுக்கு இடையில் தகராறு; மருமகன் படுகாயம்!

மாமன் மருமகனுக்கு இடையில் மது போதையில் ஏற்பட்ட தகராறு காரணமாக பாரிய இரும்பினால் தாக்கியதில் மருமகன் படுகாயம் அடைந்துள்ளார். இந் நிலையில் காயமடைந்த நபர் கிளேசி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனை வைத்தியசாலையில் ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார். இச்சம்பவத்தில் கல்மடோ இராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த பூபாலசிங்கம் ஐங்கரன் என்னும்...

67 வயதுடைய வயோதிபர் மீது கூலர் வாகனம் மோதி விபத்து !

மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி, ஜே.ஆர்.எஸ்.  அலுவலகத்திற்கு முன்பாக நேற்று முன்தினம் புதன்கிழமை(6) மாலை இடம்பெற்ற விபத்தில் படுகாயம் அடைந்த வயோதிபர் ஒருவர் நேற்றைய தினம் வியாழக்கிழமை(8) மாலை யாழ் வைத்தியசாலையில் உயிரிழந்தார். கடந்த புதன்கிழமை (6) மாலை பாடசாலை முடிவடைந்து தனது பேரனை துவிச்சக்கர வண்டியில் ஏற்றிக் கொண்டு வீடு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த 67...

சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்த 45நாளான ஆண் குழந்தை!

யாழ்ப்பாணம் அளவெட்டி பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்த ஆண் குழந்தையின் தலையில் தாக்கப்பட்டு காயங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன் செயற்கையான முறையில் மரணம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக உடற்கூற்றுப் பரிசோதனையில் அறிக்கையிடப்பட்டுள்ளது. சசிரூபன் நிகாஸ் என்ற பிறந்த 45 நாளான குழந்தையொன்று நேற்றுமுந்தினம் அளவெட்டி பகுதியில் உயிரிழந்தது. குழந்தைக்கு தாய் பால் ஊட்டியநிலையில் சில மணி நேரங்களுக்கு பின்னர் குழந்தை மயக்கமுற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டு...

கடற்கரையில் நீந்திய வெளிநாட்டவர் உயிரிழப்பு!

மலேசிய பிரஜை ஒருவர் நேற்று மாலை உனவடுனா கடற்கரையில் கடலில் நீராடச் சென்ற போது உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 61 வயதானவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த வெளிநாட்டவர் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள நீரோட்டத்தினால் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டிருக்கலாம் என ஹபராதுவ பொலிஸார் தெரிவித்தனர். அவர் உயிர்காப்பாளர்களால் மீட்கப்பட்ட போதிலும், மேலதிக சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.  
- Advertisement -spot_img

Latest News

பாதுகாப்பு கயிறு இணைக்கப்படாமையால் இளம்பெண் உயிரிழப்பு

பிரேசிலில் பஞ்சி ஜம்ப் எனப்படும் சாகச விளையாட்டின் போது பாதுகாக்கும் இழுவிசை கயிறு இணைக்கப்படாத நிலையில் உயரத்தில் இருந்து தள்ளிவிடப்பட்ட 21 வயது பெண் உயிரிழந்துள்ளார்...
- Advertisement -spot_img