மாமன் மருமகனுக்கு இடையில் மது போதையில் ஏற்பட்ட தகராறு காரணமாக பாரிய இரும்பினால் தாக்கியதில் மருமகன் படுகாயம் அடைந்துள்ளார்.
இந் நிலையில் காயமடைந்த நபர் கிளேசி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனை வைத்தியசாலையில் ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
இச்சம்பவத்தில் கல்மடோ இராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த பூபாலசிங்கம் ஐங்கரன் என்னும் 32 வயதுடைய இளைஞனே காயமடைந்துள்ளார்.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய மாமனார் கைது செய்யப்பட்டு கிளிநொச்சி போலீஸ் நிலையத்தில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.








