Saturday, November 7, 2026
No menu items!

யாழ்ப்பாணம்

இன்றைய நாளுக்கான வானிலை…!

யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை,  கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு,...

யாழில் மின்சாரம் தாக்கி ஒருவர் பலி…!

யாழ்ப்பாணம் - அனலைதீவு பகுதியில் மின்சாரம் தாக்கி ஆணொருவர் வெள்ளிக்கிழமை (18.10)  ஒருவர் உயிரிழந்துள்ளார். ஐந்தாம் வட்டாரம், அனல தீவு பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய நபரே  உயிரிழந்துள்ளார். ஐயனார் கோவிலில் பாடலை ஒலிபரப்பு செய்வதற்கு மின் இணைப்புக்களை வழங்கிய வேளை மின்சாரம் தாக்கியுள்ளது. ஆலயத்தில் நின்றவர்கள் அவரை மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதிலும், அவர்...

யாழில் நிமோனியா காய்ச்சலினால் பெண்ணொருவர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணத்தில் நிமோனியா காய்ச்சலினால் பெண்ணொருவர் நேற்று வியாழக்கிழமை (17)  உயிரிழந்துள்ளார். கோப்பாய் தெற்கை சேர்ந்த 44 வயதுடைய   பெண்ணே உயிரிழந்துள்ளார். உடற்கூற்று பரிசோதனையில் நிமோனியாவினால் தான் மரணம் சம்பவித்துள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளது.  

சங்குப்பிட்டி பாலம் சேதமடைந்து காணப்படுவதால் வாகனங்கள் செல்வதற்கு சிரமம் !

மன்னார் யாழ்ப்பாணம் வீதியில் அமைந்துள்ள சங்குப்பிட்டி பாலம் கனரக வாகனம் செல்ல முடியாத அளவுக்கு பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதால் மறு அறிவித்தல் வரை கனரக வாகன சாரதிகள் பரந்தன் ஊடாக யாழ்ப்பாணம் செல்லுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. பேருந்துகள் பயணிகள் இறங்கி நடக்க விடப்பட்டு வெறும் பேருந்துகளாக அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்கள் பொதுத் தேர்தலில் சிந்தித்து வாக்களிப்பார்களா? – சிறீ ரங்கேஸ்வரன்…

நாம் முன்னெடுத்துவரும் இணக்க அரசியல் பொறிமுறையூடாக தமிழ் மக்களின் நலன்சார்ந்து பலவற்றை சாதித்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் ஊடக பேச்சாளரும் கட்சியின் சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளருமான ஐயாத்துரை சிறிரங்கேஸ்வரன் எமது தரப்பின் முயற்சியின் காரணமாகவே 13 ஆவது திருத்தச் சட்டமும் இன்றுவரை பாதுகாக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் நேற்றையதினம்...

யாழில் ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணியின் வேட்பாளர் அறிமுக நிகழ்வு!

ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணியின் வேட்பாளர் அறிமுகம் யாழ்ப்பாணத்தில் நேற்றைய(14.10) தினம் திங்கட்கிழமை இடம்பெற்றது. யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களை உள்ளடக்கிய யாழ். தேர்தல் தொகுதியில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி யாழ்ப்பாணத்தை சேர்ந்த பிரபல வர்த்தகர் சுலக்சனை முதன்மை வேட்பாளராக கொண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் களமிறங்கியுள்ளது. முற்போக்கு தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் சுதர்சிங்...

தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் அறிமுக நிகழ்வு!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண தேர்தல் மாவட்ட வேட்பாளர் அறிமுக நிகழ்வு யாழ்ப்பாணத்தில் நேற்று(13.10) மாலை நடைபெற்றது. தமிழரசுக் கட்சியின் மூத்த துணைத் தலைவரும் வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவருமான சீ.வீ.கே. சிவஞானம் தலைமையில்  யாழிலுள்ள தந்தை செல்வா மண்டபத்தில் நடைபெற்றது. இதன் போது வேட்பாளர்கள் அழைத்து வரப்பட்டு மங்கள விளக்கேற்றலுடன் வேட்பாளர் அறிமுக நிகழ்வு...

வலிக்கண்டி பகுதி சோதனை சாவடியில் விபத்து; இருவர் படுகாயம்….!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வலிக்கண்டி இராணுவம்,  போலீஸ் இணைந்து  சோதனை சாவடியில் இடம் பெற்ற முச்சக்கரவண்டி, மற்றும் மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த சோதனைச்சாவடியில் இரவு வேளையில் தெளிவாக இனங்காணக்கூடிய மின் விளக்கு சமிஞ்சைகள் இன்மை காரணமாக குறித்த விபத்து இடம் பெற்றிருக்காலாம் என தெரிவிக்கப்படுகிறது. உந்துருளி, மற்றும்...

இலங்கைக்கான கனேடியத் தூதுவர் தீவகப்  பகுதி கடற்றொழில் அமைப்புக்களுடன் சந்திப்பு…!

இலங்கைக்கான கனேடியத் தூதுவர் எரிக் வால்ஷ் யாழ்ப்பாணம், தீவகப்  பகுதி கடற்றொழில் அமைப்புக்கள் மற்றும் தீவகப் பெண்கள் வலையமைப்பின் பிரதிநிதிகளை நேற்று சந்தித்துக் கலந்துரையாடினார். யாழ். புங்குடுதீவு புனித பிரான்சிஸ் சவேரியார் சனசமூக நிலைய மண்டபத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. இதில் வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் ஊடகப் பேச்சாளர் அன்னலிங்கம் அன்னராசா, மெசிடோ நிறுவனத்தின் பணிப்பாளர்...

முறையற்ற ரீதியில் பாடசாலை மாணவியர் மீது ஆசிரியர்கள் தாக்குதல்..!

யாழ்ப்பாணம் - கோண்டாவில் பகுதியில் உள்ள பாடசாலையொன்றில் மாணவிகளிடம் முறையற்ற நடத்தையில் ஈடுபட்ட இரண்டு ஆசிரியர்கள் மற்றும் அது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்காத அதிபர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பில் யாழ்ப்பாணம் வலயக் கல்விப் பணிப்பாளரிடம் பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர் கடிதம் மூலம் முறைப்பாடு அளித்துள்ளனர். பாடசாலையில் கல்வி கற்பிக்கும் இரண்டு ஆசிரியர்கள், பெண்பிள்ளைகளை...
- Advertisement -spot_img

Latest News

நாட்டில் அடுத்த சில மணி நேரங்களில் கனமழை  

நாட்டின் பல பகுதிகளில் அடுத்த சில மணி நேரங்களில்  100 மில்லிமீட்டருக்கு மேல் கனமழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கிறது. இந்த அறிவிப்பு இன்று (07)...
- Advertisement -spot_img