Sunday, April 26, 2026
No menu items!

ரயில்வே திணைக்களம்

இன்று முதல் விசேட ரயில் சேவை..!

புத்தாண்டைக் கொண்டாடுவதற்காக தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்ற மக்களை கொழும்பு மற்றும் பிற புறநகர்ப் பகுதிகளுக்கு அழைத்துச் செல்வதற்காக இன்று (4/18/2025) முதல் பல விசேட ரயில்கள் இயக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த விசேட ரயில் சேவைகள் இன்று (4/18/2025), நாளை (4/19/2025), நாளை மறுநாள் (4/20/2025) மற்றும் 21 ஆம் திகதி வரை...

எதிர்வரும் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு விசேட ரயில் சேவை!

எதிர்வரும் சிங்கள, தமிழ் புத்தாண்டிற்காக சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகளின் வசதிக்காக, எதிர்வரும் 11 ஆம் திகதி முதல் சிறப்பு ரயில் சேவையை இயக்க ரயில்வே திணைக்களம் திட்டமிட்டுள்ளது. இந்த சிறப்பு ரயில் சேவை இரண்டு கட்டங்களாக இயக்கப்படும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, 11, 12 மற்றும் 13 ஆம் தேதிகளில் கொழும்பிலிருந்து பதுளை, அனுராதபுரம்,...

பிரதான மார்க்கத்திலான ரயில் போக்குவரத்து பாதிப்பு..!

வல்பொல பகுதியில் ரயில் இயந்திரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக பிரதான மார்க்கத்தில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. ரம்புக்கணையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி இன்று (01/03/2025) காலை வந்த ரயிலின் இயந்திரத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. ரயில் இப்போது ராகம ரயில் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக பிரதான மார்க்கத்தில்...

மலையக ரயில் சேவைகள் பாதிப்பு..!

மரம் மற்றும் பாறை சரிந்துள்ளதால் மலையக ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி இங்குருஓயா மற்றும் கலபொட இடையே ரயில் பாதையில் மரம் ஒன்று முறிந்து விழுந்ததாலும், ஹாலிஎல மற்றும் பதுளை இடையே பாறை சரிந்ததாலும் மலையக ரயில்கள் தாமதமாகி உள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

சில ரயில் சேவைகள் தற்காலிகமாக இரத்து..!

களனிவெளி ரயில் பாதையில் இன்று (22/02/2025) மற்றும் நாளை (23/02/2025) இயக்கப்படவிருந்த சில ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. பெங்கிரிவத்தை பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும் புனரமைப்பு பணிகள் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மலையக ரயில் பாதையில் புதிய ரயில் சேவை..!

மலையக ரயில் பாதையில் புதிய ரயில் சேவை இன்று (2/10/2025) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஆரம்பிக்கப்பட்டுள்ள ரயில் சேவைக்கு "எல்ல ஒடிசி - நானு ஓயா" என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த ரயில் சேவையானது நானு ஓயாவிலிருந்து பதுளைக்கு காலை 8.10 மணிக்கு புறப்படும் என்றும் செவ்வாய்க்கிழமைகள் தவிர மற்ற அனைத்து நாட்களிலும் இது இயங்கும் எனவும் ரயில்வே...

ரயில்களில் மூன்றாம் வகுப்பு இருக்கைகளை முன்பதிவு செய்யும் வசதி நீக்கம்!

கொழும்பு கோட்டை - பதுளை, பதுளை - கொழும்பு கோட்டை, கொழும்பு கோட்டை – தலைமன்னார் மற்றும் தலைமன்னார் - கொழும்பு கோட்டை இடையே இயங்கும் ரயில்களில் மூன்றாம் வகுப்பு இருக்கைகளை மார்ச் 10 ஆம் திகதி முதல் முன்பதிவு செய்யும் வசதிகளை நீக்க ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, காலை 5.55 மணிக்கு...

இ-டிக்கெட் மோசடி – நீதிமன்றின் உத்தரவு..!

ரயில்வே திணைக்களத்தால் வழங்கப்பட்ட இ-டிக்கெட்டுகளை இணையத்தில் சட்டவிரோதமாக வாங்கியது தொடர்பாகக் கைது செய்யப்பட்ட சுற்றுலா வழிகாட்டியை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இணையத்தின் மூலம் வாங்கிய இரண்டு பயணசீட்டுகளை வெளிநாட்டினருக்கு 27,000 ரூபாவுக்கு விற்ற சம்பவம் தொடர்பாக சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக குற்றப் புலனாய்வுத் துறை நீதிமன்றத்திற்குத் தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில்...

ரயில்வே திணைக்களம் எடுத்துள்ள புதிய நடவடிக்கை..!

கொழும்பு கோட்டைக்கும் காங்கேசன்துறைக்கும் இடையில் இரவு  தபால்  ரயிலை ஜனவரி 31 ஆம் திகதி முதல் தினமும் இயக்க ரயில்வே திணைக்களம்  நடவடிக்கை எடுத்துள்ளது. கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து இரவு 8.00 மணிக்குப் புறப்படும்    ரயில், மறுநாள் அதிகாலை 4.35 மணிக்கு காங்கேசன்துறை ரயில் நிலையத்தை வந்தடையும் என்று ரயில்வே துறை தெரிவித்துள்ளது. காங்கேசன்துறை...

வெள்ளப் பெருக்கு காரணமாக தடைப்பட்ட ரயில் சேவை!

பொலனறுவைக்கும் மனம்பிட்டியவுக்கும் இடையில் தற்காலிகமாக ஆரம்பிக்கப்பட்ட ரயில் சேவை இன்று (21) காலை முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. பொலனறுவைக்கும் மனம்பிட்டியவுக்கும் இடையிலான பிரதான வீதியில் ஏற்பட்ட வெள்ளம் பெருக்கு காரணமாக குறித்த வீதியில் பஸ்கள் உள்ளிட்ட வாகனப் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால், பொதுமக்களின் வசதிக்காக ரயில்வே திணைக்களம் கடந்த 19 ஆம் திகதி முதல்...
- Advertisement -spot_img

Latest News

சோமாலியக் கடற்பகுதியில் கப்பல் கடத்தல்;பணியாளர்களில் இலங்கையரும் ஒருவர்

சோமாலியக் கடற்பகுதியில், 18,500 பெரல் எண்ணெய் மற்றும் 17 பணியாளர்களுடன் சென்ற ஒரு எண்ணெய் கப்பலைக் கடற்கொள்ளையர்கள் கடத்தியுள்ளனர். இது, சோமாலியக் கடற்கொள்ளை மீண்டும் தலைதூக்குவதன் ஒரு...
- Advertisement -spot_img