பொலனறுவைக்கும் மனம்பிட்டியவுக்கும் இடையில் தற்காலிகமாக ஆரம்பிக்கப்பட்ட ரயில் சேவை இன்று (21) காலை முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

பொலனறுவைக்கும் மனம்பிட்டியவுக்கும் இடையிலான பிரதான வீதியில் ஏற்பட்ட வெள்ளம் பெருக்கு காரணமாக குறித்த வீதியில் பஸ்கள் உள்ளிட்ட வாகனப் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால், பொதுமக்களின் வசதிக்காக ரயில்வே திணைக்களம் கடந்த 19 ஆம் திகதி முதல் பொலனறுவைக்கும் மனம்பிட்டியவுக்கும் இடையில் தற்காலிகமாக ரயில் சேவையை ஆரம்பித்தது.

பொலனறுவை-மானம்பிட்டி பாதையின் நீர் வடிந்ததால், இன்று காலை முதல் இந்த ரயில் சேவையை பொலிஸார் போக்குவரத்துக்கு திறந்துவிட்டதால், அதை இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here