Saturday, November 14, 2026
No menu items!

வரி

இலங்கை உள்நாட்டு வருவாய் துறை – வரி வசூலில் 102% இலக்கை எட்டியது!

இலங்கையின் உள்நாட்டு வருவாய் துறை (IRD), 2025 ஆம் ஆண்டின் செப்டம்பர் மாத இறுதிக்குள் எதிர்பார்த்த வரி வருவாயின் 102% ஐ வசூலித்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாடாளுமன்றத்தின் வழிகள் மற்றும் வழிமுறைகள் குறித்த குழுவிற்கு வழங்கப்பட்ட தரவுகளின்படி, செப்டம்பர் 30ஆம் தேதியன்று வரை மொத்த வருவாய் ரூ. 1.64 டிரில்லியனாக பதிவாகியுள்ளது. இது எதிர்பார்க்கப்பட்ட...

அமெரிக்காவால் விதிக்கப்பட்ட வரி தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் விசேட கலந்துரையாடல்!

அமெரிக்காவால் விதிக்கப்பட்ட புதிய 30% தீர்வை வரி தொடர்பாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (10) காலை ஜனாதிபதி செயலகத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்தக் கலந்துரையாடல், முன்னர் அறிவிக்கப்பட்ட 44% வரியை 30% ஆகக் குறைத்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் முடிவை அடுத்து, இலங்கையின் நிலைப்பாடு மற்றும் எதிர்கால உத்திகளை...

அமெரிக்கா – சீனா இடையே TikTok ஒப்பந்த பேச்சுவார்த்தை: டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஜூலை 4ஆம் திகதி வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, பிரபலமான குறுந்தொடர் வீடியோ பயன்பாடு TikTok தொடர்பான ஒப்பந்தத்துக்கான பேச்சுவார்த்தைகளை ஜூலை 7 அல்லது 8ஆம் திகதி சீனாவுடன் ஆரம்பிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். "நாங்கள் இதற்கான ஒப்பந்தத்தை பெரும்பாலும் உறுதிசெய்துள்ளோம். சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கை நேரடியாகவோ அல்லது அவரது பிரதிநிதிகளின் மூலமாகவோ...

ஐரோப்பிய ஒன்றிய இறக்குமதிகள் மீது 50% கூடுதல் வரி விதிப்பு..!

வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறிய கதையாய் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வரிப் போரை மீண்டும் தீவிரப்படுத்தி உள்ளார். கடந்த ஏப்ரல் மாத தொடக்கத்தில் இலங்கை, இந்தியா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு வரி உயர்வை டிரம்ப் அறிவித்தார். இதை எதிர்த்த சீனாவுக்கு வரி 145 சதவீதம் வரை உயர்த்தப்பட்டது. மற்ற நாடுகளுக்கான வரி...

சீனா மீதான வரியை குறைப்பது குறித்து ட்ரம்ப் பரிசீலனை..!

சீன இறக்குமதி பொருட்கள் மீதான 145 சதவீதம் கூடுதல் வரி விதிப்பை 80 சதவீதமாக குறைப்பது குறித்து ட்ரம்ப் பரிசீலனை செய்து வருகிறார். தற்போதைய சூழலில் சீன பொருட்கள் மீது 80சதவீதவரிவிதிப்பே போதுமானது என்று தோன்றுகிறது. சீனா தனது சந்தையை உலகத்துக்கு திறந்துவிட வேண்டும். மூடிய பொருளாதாரம் இனியும் பயனளிக்காது என்றும் தெரிவித்தார்.

உள்நாட்டு வருவாய்த் துறை அலுவலக வளாகத்தில் ஏர் கண்டிஷனர்கள் இல்லாததால் ஊழியர்கள் போராட்டம்!

உள்நாட்டு வருவாய்த் துறை அலுவலக வளாகத்தில் ஏர் கண்டிஷனர்கள் மற்றும் காற்றோட்டம் உள்ளிட்ட வசதிகள் இல்லாததால், அந்தத் துறை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஊடகங்களிடம் பேசிய ஊழியர்கள், காலை 10.00 மணிக்குப் பிறகு அலுவலகக் கட்டிடம் உலை போன்றது என்றும், ஊழியர்கள் உள்ளே இருக்க முடியாது என்றும் தெரிவித்தனர். "கடந்த ஒன்றரை வருடங்களாக, வசதிகள் இல்லாததால், அலுவலகம்...

அமெரிக்க வரி விதிப்பால் தேயிலை தொழிற்துறை பாதிக்கும் அச்சம்!

அமெரிக்காவினால் அறிவிக்கப்பட்டுள்ள வரி காரணமாக தங்களது தொழிற்துறை பாதிப்படையும் அச்சம் நிலவுவதாக இலங்கை தேயிலை ஏற்றுமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் 90 நாட்கள் சலுகைக் காலத்துக்குள் இந்த பிரச்சினை தீர்க்கப்படாவிட்டால் அமெரிக்காவிற்கான தேயிலை சந்தையில் பின்னடைவு ஏற்படும் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். அமெரிக்கா, இலங்கையின் முக்கியமான தேயிலை சந்தையாக உள்ளது. அத்துடன் இலங்கையில் இருந்து அதிக அளவில் தேயிலையை...

அமெரிக்கா – சீனா வர்த்தக போர் தீவிரமடையும் : பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை!

சீனாவுக்கு எதிரான வரி உடனடியாக அமுலுக்கு வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். தமது உத்தியோகபூர்வ சமூக ஊடகப் பக்கத்தில் இதனைப் பதிவிட்டுள்ள அவர், எதிர்காலத்தில் சீனா, அமெரிக்காவின் நிலைப்பாடு ஏற்றுக் கொள்ளத்தக்கவை என்று உணரும் எனத் தாம் நம்புவதாகக் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, உலகளாவிய வீழ்ச்சியின் காரணமாக தங்களின் கொள்கையில் மாற்றம் ஏற்படவில்லை என அமெரிக்க...

சீன பொருட்களுக்கு 104% வரி விதித்த ட்ரம்ப்..!

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா 104% வரியை விதித்துள்ளது. இது இன்று (4/9/2025) முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்று வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலையில் வீழ்ச்சி..!

அமெரிக்க ஜனாதிபதியின் வரி அறிவிப்பை அடுத்து சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 7.41 சதவீதம் வீழ்ச்சியடைந்து 61.99 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 65.58 அமெரிக்க...
- Advertisement -spot_img

Latest News

பலாங்கொடையில் சட்டவிரோத சாராயம் தயாரிக்கும் பொருட்கள் மீட்பு – இளைஞர் கைது

பலாங்கொடையில் பெருமளவு சட்டவிரோத சாராயம் மற்றும் அதனை தயாரிக்க பயன்படுத்தப்படும் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் 24 வயதுடைய சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸாரின்...
- Advertisement -spot_img