Wednesday, June 17, 2026
No menu items!

வலுசக்தி அமைச்சர்

வலுசக்தி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோற்கடிப்பு

வலுசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடிக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை 104 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக 153 வாக்குகளும் ஆதரவாக 49 வாக்குகளும் அளிக்கப்பட்டன. தரம் குறைந்த நிலக்கரி கொள்வனவு ஊடாக நாட்டுக்கு பாரிய நஷ்டத்தை ஏற்படுத்தியதாக தெரிவித்து அமைச்சர் குமார ஜெயகொடிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா பிரேரணை இன்று...

மின்சார சபை மறுசீரமைப்பு தொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சர் ஜயகொடி!

மின்சார சபை மறுசீரமைப்பின் மூலம் உச்ச பயன் நாட்டு மக்களுக்கு நேரடியாக வழங்கப்படும் என்று வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி உறுதியளித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று  (20) நடைபெற்ற வலுசக்தி அமைச்சுக்கான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து உரையாற்றிய அவர், மின்சார சபையின் பணிகள் மற்றும் பொறுப்புகள் முழுமையாக அரச அங்கீகாரம் பெற்ற...

எரிபொருள் வரி நீக்குவதற்கு சாத்தியக்கூறு இல்லை – வலுசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி!

எரிபொருளுக்கு விதிக்கப்பட்டுள்ள வரியை நீக்குவதற்கான சாத்தியக்கூறு இல்லை என, வலுசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி தெரிவித்துள்ளார். இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தினால், பெறப்பட்ட கடனை முழுமையாக மீளச் செலுத்தும் வரை அதற்கான சாத்தியம் இல்லை எனவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். அத்துடன், குறித்த கடன் தொகையில் தற்போது ஒரு பகுதி மாத்திரமே செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், வரிச்சலுகை...

நாட்டில் எரிபொருள் நுகர்வு வீதம் வீழ்ச்சி – புதிய பெட்ரோல் நிலையங்களுக்கான அனுமதி தற்காலிகமாக இடைநிறுத்தம்!

நாட்டில் எரிபொருள் நுகர்வு சுமார் 30 சதவீதம் குறைந்துள்ளதாக வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோது அவர் இதனைக் கூறியுள்ளார். மேலும், புதிய பெட்ரோல் நிலையங்களுக்கு அனுமதிப்பத்திரங்கள் வழங்கும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். மின்சார உற்பத்திக்குப் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை அதிகளவில் பயன்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின்...

அதானி காற்றாலை மின் திட்டம் இரத்து செய்யப்படவில்லை – குமார ஜயக்கொடி..!

அதானி நிறுவனத்துடன் இணைந்து மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்த காற்றாலை மின் திட்டம் இன்னும் இரத்து செய்யப்படவில்லை என்று வலுசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் நடைபெற்ற வலுசக்தி அமைச்சின் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற குழு உறுப்பினர்கள் இந்தத் திட்டம் குறித்து அமைச்சரிடம் வினவினர், இதற்கு பதிலளித்த...

மின் கட்டமைப்பின் ஸ்திரத்தன்மையை மேம்படுத்த ஐவரடங்கிய குழு நியமனம்!

தேசிய மின் கட்டமைப்பின் ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதற்கான பரிந்துரைகளை முன்வைப்பதற்கு ஐவரடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. அமைச்சர், பொறியியலாளர் குமார ஜயக்கொடியின் ஆலோசனைக்கமைய இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. கடந்த ஞாயிறு (09) ஏற்பட்ட திடீர் மின்தடையைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் உதயங்க ஹேமபால குறிப்பிட்டார். இந்த குழுவின் தலைவராக பேராதனை பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்...

பணிநீக்கம் செய்யப்பட்ட இலங்கை மின்சார சபையின் பணியாளர்கள் மீண்டும் கடமையில்..!

கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் பணிநீக்கம் செய்யப்பட்ட இலங்கை மின்சார சபையின் 62 பணியாளர்களும் மீண்டும் கடமையில் இணைக்கப்பட்டுள்ளனர். வலுசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடியின் விசேட பணிப்புரைக்கமைய அவர்கள் மீண்டும் கடமையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். கடந்த ஜனவரி மாதம், இலங்கை மின்சார சபையைத் தனியார் மயமாக்குவதற்கு எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் முயற்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து...

எரிபொருள் விலையை குறைக்க முடியுமா…?

விலை சூத்திரத்துக்கு அமைய எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி எரிபொருள் விலையை 15 முதல் 20 ரூபாவுக்கு இடைப்பட்ட அளவில் குறைக்க முடியுமென முன்னாள் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் எரிபொருள் விலை தொடர்பில் கருத்துரைத்தவர்கள், தற்போது மக்களுக்கு உண்மையைக் கூற வேண்டும் எனவும் முன்னாள் வலுசக்தி அமைச்சர் கஞ்சன...
- Advertisement -spot_img

Latest News

புராதன பொருளை 20 மில்லியனுக்கு விற்க முயன்ற ஐவர் கைது

புராதன தொல்பொருள் மதிப்புள்ளதாக நம்பப்படும் கல் ஒன்றை விற்க முயன்ற குற்றச்சாட்டில் 5 சந்தேகநபர்கள் புல்மோட்டையில் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், நேற்று புல்மோட்டை...
- Advertisement -spot_img