அரசாங்கத்தின் திட்டமிடப்படாத வாகன இறக்குமதியால், அடுத்த ஆண்டுக்குள் சுமார் 3,000 குறுகிய தூரப் பேருந்துகள் சேவையில் இருந்து விலகும் அபாயம் உருவாகியுள்ளது என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன எச்சரித்துள்ளார்.
இது தொட்ர்பில் அவர் கூறுகையில்,
திட்டமற்ற வாகன இறக்குமதி காரணமாக வீதிகளில் போக்குவரத்து நெரிசல் கடுமையாக அதிகரித்துள்ளது. இதனால், பேருந்துகளின் எரிபொருள் செலவுகள் உயர்ந்துள்ளதுடன், தினசரி இயக்கப்படும் பயணங்களின் எண்ணிக்கையும் கணிசமாகக் குறைந்துள்ளது, என்றார்.
இந்நிலையால், பல பேருந்து உரிமையாளர்கள் தொழிலில் இருந்து விலகும் நிலை உருவாகி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
அவர் மேலும் எச்சரித்ததாவது, இந்நிலை தொடர்ந்தால் பொது மக்கள் போக்குவரத்து சேவையில் கடும் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.








