Tuesday, April 21, 2026
No menu items!

வாக்காளர் அட்டை

கிளிநொச்சியில் வாக்காளர் அட்டை விநியோகிக்கும் பணி..!

2025ம் ஆண்டு உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வாக்காளர் அட்டை விநியோகிக்கும் பணியில் தபால் ஊழியர்கள் (4/17/2025) இன்று முதல் ஈடுபட்டு வருகின்றனர். நேற்றைய தினம் தேர்தல் திணைக்களத்தினால் உத்தியோகபூர்வமாக அஞ்சல் திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டதைத் தொடர்ந்து இன்றைய தினம் வீடு வீடாக சென்று தபால் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கும் நாள் அறிவிப்பு!

எதிர்வரும் மே மாதம் 6 ஆம் திகதி நடைபெற உள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள் இன்றைய தினம் அஞ்சல் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளன. அதன்படி, வீடுகளுக்குச் சென்று வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் பணிகள் நாளை முதல் ஆரம்பிக்கப்படும் எனவும், குறித்த பணிகள் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின்...

பொதுத் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு இன்றுடன் நிறைவு!

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு நடவடிக்கை இன்றுடன் நிறைவடைகின்றது. கடந்த ஒக்டோபர் மாதம் 31ஆம் திகதி முதல் அஞ்சல் மூல வாக்களிப்பு நடவடிக்கை கட்டம் கட்டமாக இடம்பெற்று வருகிறது. இதற்கமைய, கடந்த ஒக்டோபர் மாதம் 31ஆம் திகதி மாவட்ட செயலகங்கள், தேர்தல் அலுவலகங்கள் மற்றும் அனைத்து காவல்துறை பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்கு அஞ்சல் மூலம் வாக்களிப்பதற்குச்...

அஞ்சல் திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்…!

பொதுத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை எதிர்வரும் 7 ஆம் திகதிக்கு முன்னதாக வீடுகளுக்கு கிடைக்காவிடின் அது தொடர்பாக அருகில் உள்ள அஞ்சல் நிலையத்தில் வினவுமாறு அஞ்சல் திணைக்களம் கோரியுள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைத்த பிரதி அஞ்சல் மா அதிபர் ராஜித்த ரணசிங்க இதனைத் தெரிவித்துள்ளார். பொதுத்தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர்...

தேர்தலுக்கான வாக்காளர் அட்டை விநியோக பணிக்காக 8,000 ஊழியர்கள் நியமிப்பு!

பாராளுமன்றத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகம் நாடளாவிய ரீதியில் நேற்று ஆரம்பமாகியிருப்பினும், கொழும்பு மற்றும் வன்னி மாவட்டங்களில் இன்று ஆரம்பமாகவுள்ளதாக தபால் திணைக்களம் அறிவித்துள்ளது. உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளுடன் தேவையான அறிவித்தல்களை தேர்தல்கள் ஆணைக்குழு வழங்காமையால் இவ்விரு மாவட்டங்களிலும் விநியோகம் தாமதமாகியுள்ளதாக சிரேஷ்ட பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார். இருப்பினும், தேர்தல்...

உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகம் நாளை…!

பொதுத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் மாவட்டச் செயலாளர் காரியாலயங்கள் ஊடாக அஞ்சல் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பிரதி அஞ்சல் மா அதிபர் ராஜித ரணசிங்க இதனைத் தெரிவித்துள்ளார். நாளை முதல் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

வாக்காளர் அட்டைகளை  விநியோகிக்காமல் வைத்திருந்த தபால் ஊழியர்…! 

புத்தளத்தில் 145 வாக்காளர் அட்டைகளை விநியோகிக்காமல் தபால் ஊழியர் ஒருவர் தம்வசம் வைத்திருந்ததாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. புத்தளம் வாக்காளிப்பு நிலையங்களுக்கான ஐக்கிய தேசியக் கட்சியின் முகவரிடம் இருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் பேரில் புத்தளம் மாவட்ட தபால் அத்தியட்சகர் குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவுக்கும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்...

புத்தளத்தில்  விநியோகிக்காமல்  உள்ள வாக்காளர் அட்டைகள்!

புத்தளத்தில் தபால் உத்தியோகத்தர் ஒருவர் 145 உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்காமல் வைத்திருந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் புத்தளம் மாவட்ட அமைப்பாளரிடம் இருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் பேரில் புத்தளம் மாவட்ட தபால் அத்தியட்சகர் இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளார். இந்நிலையில் விநியோகிக்கப்படாத வாக்காளர் அட்டைகள் தபால் அத்தியட்சகரினால் வர்த்தக நிலையமொன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளன என...

வாக்காளர் அட்டைகளை விநியோகிக்காமல் வைத்திருந்த தபால் உத்தியோகத்தர் பணி நீக்கம்!

களுத்துறையில் 900 வாக்காளர் அட்டைகளை விநியோகிக்காமல் வைத்திருந்த தபால் உத்தியோகத்தரை உடனடியாக பணி இடைநிறுத்துமாறு தபால் மா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார். களுத்துறையில் பயாகல, அயகம கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்குட்பட்ட மக்களுக்கு வழங்கப்படவேண்டிய உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்காமல் வைத்திருந்தவரே இவ்வாறு பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இது குறித்து பிரதேச மக்களால் வழங்கப்பட்ட முறைப்பாடுகளுக்கு அமையவே குறித்த உத்தரவு...

வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் பணிகள் நிறைவு…!

ஜனாதிபதி தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை வீடுகளுக்கு விநியோகிக்கும் பணிகள் இன்று நிறைவடையவுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் இன்று கிடைக்கப்பெறாவிடின், உங்கள் பிரதேசத்திலுள்ள தபால் நிலையத்திற்கு சென்று அடையாளத்தை உறுதிப்படுத்தி அதனைப் பெற்றுக்கொள்ள வாய்ப்பு உள்ளதாக பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.
- Advertisement -spot_img

Latest News

அமைச்சரின் சட்ட அறிவித்தலுக்கு பதில் அனுப்பப்படும்; ‘ஹிரு’

ஹிரு செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தி தொடர்பில் அமைச்சர் கே.டி லால்காந்த அனுப்பிய சட்ட அறிவித்தல் கடிதத்துக்கு அடுத்த 24 மணி நேரத்துக்குள் பதில் அனுப்படும்...
- Advertisement -spot_img