ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்ளும் வகையில், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க நியூயோர்க் நகரிற்கு விஜயம் செய்துள்ளார்.
இந்த விஜயத்தின் போது, நேற்று (செப்டம்பர் 25) ஜனாதிபதியும், ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸும் இடையே முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. இந்த சந்திப்பு, நியூயோர்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் நடைபெற்றது.
சந்திப்பின் போது, இலங்கையின் புதிய பொருளாதார சீர்திருத்த செயல்முறை, மற்றும் நாட்டை சமூக, பொருளாதார மற்றும் அரசியல் ரீதிகளில் புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் அரசாங்கத்தின் திட்டங்களைப் பற்றி ஜனாதிபதி விரிவாக விளக்கினார்.
இதற்கு பதிலளித்த ஐ.நா. பொதுச்செயலாளர், இலங்கை அரசாங்கத்தின் முற்போக்கான செயல்திட்டங்களை ஐக்கிய நாடுகள் சபை முழுமையாக ஆதரிப்பதாகவும், தேவையான ஒத்துழைப்பை வழங்கத் தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார்.








