Friday, November 13, 2026
No menu items!

விவசாயி

விவசாயிகளுக்கான உர மானிய நிதி இன்று வங்கிக் கணக்குகளில்!

சிறுபோகத்துக்காக 9 மாவட்டங்களின் விவசாயிகளுக்குத் தேவையான உர மானிய நிதி இன்று அவர்களின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளது. விவசாய அபிவிருத்தி திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ரோஹன ராஜபக்ச இதனைத் தெரிவித்துள்ளார். இதற்காக 120 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, சிறுபோக நெற்செய்கையில் ஈடுபடும் விவசாயிகள் அனைவரும், எலிக்காய்ச்சல் தடுப்பு மருந்துகளைப் பெற்றுக் கொள்ள வேண்டியது கட்டாயம்...

விவசாயிடம் இலஞ்சம் பெற்ற கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் கைது..!

மட்டக்களப்பு சித்தாண்டியில் விவசாயி ஒருவரின் வயலுக்கு உரம் மற்றும் மழை வெள்ளத்தால் சேதமடைந்ததற்கு நஷ்டஈடு பெற்றுத் தருவதற்கு 50 ஆயிரம் ரூபா பணத்தை இலஞ்சமாக பெற்றுக் கொண்ட வந்தாறுமூலை கமநலஅபிவிருத்தி திணைக்கள உத்தியோகத்தர் ஒருவரை மாறுவேடத்தில் இருந்த இலஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவினர் இன்று புதன்கிழமை (05/03/2025) பகல் செங்கலடி பிரதேசத்தில் வைத்து கைது செய்தனர். சித்தாண்டி...

யானை தாக்கி விவசாயி ஒருவர் உயிரிழப்பு!

அநுராதபுரம், ஹபரணை, புவக்பிட்டிய பிரதேசத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (04) மாலை யானை தாக்கி விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஹபரணை பொலிஸார் தெரிவித்தனர். விவசாயி நேற்றைய தினம் மாலை தனது வீடு நோக்கிப் பயணித்துக்கொண்டிருக்கும் போது யானை தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஹபரணை பிரதேசத்தில் வசிக்கும் நபரொருவரின் பராமரிப்பில் உள்ள “பொடிராஜா“ என்ற யானையே இவ்வாறு விவசாயியை...

விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் முயற்சி..!

யாழ்ப்பாண பல்கலைக்கழக விவசாய பீடத்தின் ஒரு முயற்சியான விவசாயிகளையும் பல்கலைக்கழக மாணவர்களையும் இணைத்து விவசாயிகளின் பிரச்சினைகளை கேட்டறிந்து அவற்றிற்கு தீர்வு காணும் முயற்சியாகிய  Agri tech 2025 விவசாய மாநாடு இன்று (2/21/2025) யாழ் பல்கலைக்கழக விவசாய பீட கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. விவசாய பீட பீடாதிபதி பேராசிரியர் கே.பகீரதன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பல்கலைக்கழக...

வெள்ளத்தால் சேதமடைந்த பயிர்களுக்கான இழப்பீட்டு தொகை பெறாத விவசாயிகளுக்கு விசேட அறிவிப்பு!

கடந்த நவம்பரில் ஏற்பட்ட வெள்ளத்தால் சேதமடைந்த பயிர்களுக்கான இழப்பீட்டு தொகையை பெறாத மாவட்டங்களில் உள்ள விவசாயிகளுக்கு உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று விவசாய மற்றும் விவசாயிகள் காப்பீட்டு சபை தெரிவித்துள்ளது. அதன்படி, மட்டக்களப்பு மாவட்டத்தில் சேதமடைந்த நெற்பயிர்களுக்காக 9,368 விவசாயிகளின் கணக்குகளில் நாளை (19) 202 மில்லியன் ரூபாவை வைப்பிலிட திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. திருகோணமலை மாவட்டத்தில்...

குறைந்த விலையில் அரிசி வழங்கப்படும் – நாமல் கருணாரத்ன..!

விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்யப்படும் நெல்லை அரிசியாக்கி தற்போதைய சந்தை விலையை விடக் குறைந்த விலையில் நுகர்வோருக்கு வழங்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார். பிரதி அமைச்சர் இன்று நாடாளுமன்றத்தில் மேலும் உரையாற்றுகையில், "நாங்களும் இதைப் பொறுப்புடன் சொல்கிறோம்.  நாங்கள் விவசாயிக்கு இங்கு மிகவும் நியாயமான விலையைக் கொடுத்துள்ளோம். அதேபோல அரசின் களஞ்சியசாலைகளுக்கு கொள்வனவு...

அதிக விலையில் நெல் கொள்முதல்!

நாட்டின் முக்கிய தனியார் அரிசி ஆலை உரிமையாளர்கள் ஏற்கனவே நெல்லை கொள்முதல் செய்ய ஆரம்பித்துள்ளனர். அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட உத்தரவாத விலையை விட 5, 6 ரூபாய் அதிக விலையில் நெல்லை கொள்முதல் செய்வதாக அறியக்கிடைத்துள்ளது. அதிக விலைக்கு தனியார் அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு நெல்லை விற்பனை செய்து வருவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். அரசாங்கத்தின் உத்தரவாத விலையை விட 5,...

ஒரு கிலோ நெல்லுக்கான விலை அறிவிப்பு!

ஒரு கிலோ நெல்லுக்கு வழங்கப்படும் விலைகளை அரசாங்கம் இன்று (05) நெல் சந்தைப்படுத்தல் சபை மூலம் அறிவித்துள்ளது. நெல் சந்தைப்படுத்தல் சபை நெல் கொள்முதல் செய்யும் விலையை அறிவிப்பதற்காக இன்று (05) விசேட ஊடக சந்திப்பு ஒன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது, அதற்காக விவசாய அமைச்சர் கே.டி. லால்காந்த மற்றும் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன ஆகியோர்...

நெல்லுக்குரிய நிர்ணய விலை தீர்மானிக்கப்பட வேண்டும் – அடைக்கலநாதன் எம்.பி..!

அரசாங்கம் வடக்கு கிழக்கில் உள்ள விவசாயிகளின் பிரச்சனைகளுக்கு இது வரை உரிய தீர்வை பெற்றுக் கொடுக்கவில்லை என்றும், பல்வேறு பாதிப்புகளுக்கு மத்தியில் விவசாய செய்கையை முன்னெடுத்துள்ள விவசாயிகளின் நெல்லுக்கு உரிய நிர்ணய விலையை தீர்மானிக்க அரசாங்கம் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று...

நெல் கொள்வனவு செய்வதற்கு பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு!

நெல் கொள்வனவு செய்வதற்கு அரசாங்கத்திற்கு ரூபா 5 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கெக்கிராவ பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி, நெல்லுக்கான சான்று விலை விரைவில் அறிவிக்கப்படும் என உறுதியளித்தார். நாட்டில் தேங்காய் தட்டுப்பாடு நிலவுவதை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி திஸாநாயக்க, இந்த பற்றாக்குறைக்கு முன்னர் வருடாந்தம் சுமார்...
- Advertisement -spot_img

Latest News

கஸ்ஸப தேரர் உட்பட 7 பேருக்கு விளக்கமறியல்

அனுராதபுரம் ருவன்வெலி சாய அருகில் நீதிமன்ற உத்தரவை மீறி சாகும் வரை உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த கஸ்ஸப தேரர் உட்பட 7 பேரை நவம்பர் 26 ஆம்...
- Advertisement -spot_img