Wednesday, September 30, 2026
No menu items!

வேட்புமனு தாக்கல்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவு..!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யும் நடவடிக்கைகள் இன்று நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்துள்ளது. அத்துடன், வேட்புமனு தாக்கல் தொடர்பான ஆட்சேபனைகளை தெரிவிப்பதற்கான காலம் பிற்பகல் ஒரு மணிமுதல் 1.30 மணியுடன் நிறைவடைவதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் விடுத்துள்ள அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக வேட்புமனு தாக்கல் செய்யும் சகல வேட்பாளர்களும் தங்களது சொத்து மற்றும் பொறுப்புகள் தொடர்பான அறிக்கையையும் சமர்ப்பிக்க வேண்டும் எனத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். தேர்தல்கள் செயலகத்தில் நேற்று இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும்போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். வேட்புமனு தாக்கல் செய்யப்படும்போது, அதில்...

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதி தொடர்பில் வெளியான அறிவிப்பு..!

வேட்புமனு தாக்கல் முடிந்த பின்னரே உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதியை அறிவிக்க முடியும் எனத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அம்பாறை பகுதியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். உள்ளூராட்சி மன்ற தேர்தல் சட்டத்தின் பிரகாரம், 14 நாட்கள் கட்டுப்பணம் செலுத்துவதற்கு ஒதுக்கப்படும். கட்டுப்பணம்...

தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிவித்தல்!

எதிர்வரும் பொதுத் தேர்தலில் வாக்களிக்கும் முறைமை தொடர்பில், தேர்தல்கள் ஆணைக்குழு தெளிவுபடுத்தியுள்ளது. அறிக்கையொன்றை வெளியிட்டுத் தேர்தல்கள் ஆணைக்குழு இதனைத் தெரிவித்துள்ளது. பொலன்னறுவை, மொனராகலை மற்றும் கேகாலை ஆகிய தேர்தல் தொகுதிகளின் ஒருபக்கத்தில் மாத்திரம் வாக்குச் சீட்டுகள் அச்சிடப்பட்டுள்ளதாக அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எனினும் நாட்டின் ஏனைய தொகுதிகளில் வாக்குச் சீட்டுகள் இரண்டு பக்கங்களில் அச்சிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, ஒவ்வொரு வாக்காளருக்கும்...

வேட்பாளர்கள் அனைவரும் சொத்து விபரங்களை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும்!

வேட்புமனு தாக்கல் செய்யும் ஒவ்வொரு வேட்பாளரும் அன்றைய தினம் தங்களது சொத்து மற்றும் பொறுப்புகள் தொடர்பான விபரங்களைக் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனுவைத் தாக்கல்...

பொதுதேர்தல் நடத்தப்படும் திகதி அறிவிப்பு!

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இலங்கையின் பாராளுமன்றத்தை கலைப்பதற்கு அரசியலமைப்பு அதிகாரங்களை பிரயோகித்துள்ளார். செப்டெம்பர் 24ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் இந்தத் தீர்மானம், இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 70ஆவது சரத்தின் கீழும், 1981ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க நாடாளுமன்றத் தேர்தல்கள் சட்டத்தின் 10ஆவது பிரிவின்படியும் எடுக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு நவம்பர் 14...

தேர்தல் ஆணைக்குழுவின் விசேட அறிவித்தல்..!

2024 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட உள்ள 40 வேட்பாளர்களில் 39 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக  தேர்தல் ஆணைக்குழு தலைவர் தெரிவித்துள்ளார். வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு 03 ஆட்சேபனைகள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பத்தரமுல்லை சீலரதன தேரரால் ஒரு குறிப்பிட்ட வேட்பாளரை குறிப்பிடாமல் ஒரு ஆட்சேபனை தாக்கல் செய்யப்பட்டிருந்ததுடன், இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள்...

ஆரம்பமாகவுள்ள தேர்தலுக்கான அச்சுப்பணி..!

இவ்வாண்டுக்கான ஜனாதிபதித் தேர்தலுக்கான அச்சுப் பணிகள் நாளை(16.08) ஆரம்பிக்கப்படவுள்ளதாக அரச அச்சக அலுவலர் கங்கா கல்பானி லியனகே தெரிவித்துள்ளார். இன்று(15.08) வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தவுடன் தேர்தல் ஆணையத்தின் ஒப்புதலைத் தொடர்ந்து இது வழங்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள போதிலும், 2019 ஆம் ஆண்டு பயன்படுத்தப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனத்துடன் ஒப்பிடுகையில், வாக்குச்...

விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள்!

ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யும் தினத்தன்று விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன. தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆலோசனைக்கமைய இந்த விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன. இந்த பாதுகாப்பு திட்டங்களுக்கு விசேட அதிரடிப்படையினரின் உதவியும் பெற்றுக்கொள்ளப்படவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
- Advertisement -spot_img

Latest News

இந்த ஆண்டில் இதுவரையில் 891 துப்பாக்கிகள் மீட்பு

2026 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் இருந்து செப்டம்பர் மாதம் வரை 891 சட்டவிரோத துப்பாக்கிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ...
- Advertisement -spot_img