Saturday, November 21, 2026
No menu items!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன

தற்போதைய அரசாங்கம் நியாயமற்ற வரிக்கொள்கையை நடைமுறைப்படுத்துகிறது: நாமலின் கருத்து..!

நாட்டின் பொது மக்களை புறக்கணிக்காமல் பொருளாதாரத்தை மேம்படுத்தும் பொறுப்பை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஏற்கும் என அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மாவத்தகம பிரதேசத்தில் இடம்பெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட போதே அவர் இதனை கூறியுள்ளார். “நாட்டிற்கு தீங்கு விளைவிக்கும் அரசியல் முடிவை நாங்கள் ஒருபோதும் எடுக்கவில்லை. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்த நாட்டின்...

ஜனாதிபது வேட்பாளர் நாமலின் உறுதிமொழி..!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச, சமுர்த்தி வேலைத்திட்டத்தை பலப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார். நாவலப்பிட்டியில் இடம்பெற்ற பேரணியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் சமுர்த்தி வேலைத்திட்டத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளார். இலங்கையில் வறுமையை ஒழிப்பதில் முக்கியமானதாக இருக்கும் திட்டத்தை பற்றி சில தலைவர்களின் எதிர்மறையான கருத்தையும் நாமல் ராஜபக்ச விமர்சித்தார். இங்கு மேலும் கருத்து...

ரணிலுக்கு ஆதரவு தெரிவித்த திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்..!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்  விமலவீர திஸாநாயக்க உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள் பலருடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு தமது ஆதரவை தெரிவிக்கும் வகையில் இணைந்துகொண்டுள்ளார். நேற்று (26.08) பிற்பகல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை கொழும்பு ப்ளெவர் வீதியில் உள்ள ஜனாதிபதியின் அரசியல் காரியாலயத்தில் சந்தித்து தனது ஆதரவை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, நாட்டின்...

ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு வழங்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள்!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு வழங்க மேலும் இரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரான சாரதி துஸ்மந்த ஆகியோர் தங்களது ஆதரவை இன்று (23) ஜனாதிபதியைச் சந்தித்து வெளியிட்டுள்ளனர்.    

கட்சி விட்டு கட்சி தாவும் பாராளுமன்ற உறுப்பினர்…!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கருணாதாச கொடித்துவக்கு எதிர்க்கட்சியில் இணைய தீர்மானித்துள்ளார். பாராளுமன்றத்தில் விசேட உரை ஒன்றை ஆற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். நாட்டின் எதிர்காலத்திற்காகவும், நாட்டின் பொருளாதாரத்திற்காகவும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பதாகவும் மேலும் அவர் கூறியுள்ளார். 2020 ஆம் நடைபெற்ற பொதுத் தேர்தலில், ஸ்ரீலங்கா பொதுஜன...

ஆரம்பிக்கும்  நாமலின் பிரச்சார கூட்டம்..!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முதலாவது ஜனாதிபதித் தேர்தல் பிரச்சார கூட்டம் இன்று (21.08) அனுராதபுரத்தில் நடைபெறவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன தெரிவித்துள்ளார். பொதுஜன பெரமுனவின் முதலாவது ஜனாதிபதித் தேர்தல் பிரச்சார கூட்டத்தை அனுராதபுரத்தில் நடத்த முடிந்தமை பொதுஜன பெரமுனவுக்குக் கிடைத்த வெற்றியாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவின் வெற்றியடையச் செய்யும் நோக்கில்...

புதிய கூட்டணிக்கு தலைமை தாங்கும் முன்னாள் பிரதமர்..!

ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்களால் உருவாக்கப்படவுள்ள புதிய கூட்டணியின் தலைவர் பதவியை பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. புதிய கூட்டணியை உருவாக்குவது தொடர்பான ஆரம்பக்கட்ட கலந்துரையாடல் இன்று (20.08) காலை அலரிமாளிகையில் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் நடைபெற்றது. ஜனாதிபதிக்கு ஆதரவளிக்க வரும் பொது மக்கள் முன்னணியின் மாகாண சபைகள்...

ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்கும் இராஜாங்க அமைச்சர்..!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தீர்மானித்துள்ளார்.

ரணிலுக்கு அதிகரிக்கும் ஆதரவு..!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் குருநாகல் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர்கள் 17 பேர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளனர். ஐக்கிய தேசியக் கட்சியின் உபத் தலைவர் அகிலவிராஜ் காரியவசத்துடனான சந்திப்பின் பின்னர் அவர்கள் இது குறித்து தீர்மானத்தை மேற்கொண்டுள்ளனர். இதன்போது, ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றிக்காக தம்மை அர்ப்பணிப்பதாக பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய...

கொழும்பு பேராயருடன்  நாமல் ராஜபக்ஷ சந்திப்பு!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ, கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் அவர்களை பொரளையில் உள்ள பேராயரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்றையதினம் சந்தித்துள்ளார். இச் சந்திப்பின் போது, ​​2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களை விசாரிக்க ஒரு சுயாதீன ஆணைக்குழுவின் அவசியத்தை பேராயர் வலியுறுத்தியுள்ளார். 2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத்...
- Advertisement -spot_img

Latest News

தமிழரசு கட்சி வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க தீர்மானம்!

இலங்கை தமிழரசு கட்சி 2027 வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கு எதிராக வாக்களிக்க தீர்மானித்துள்ளது. இன்று (20) பாராளுமன்றத்தில் உரையாற்றிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரன்...
- Advertisement -spot_img