Saturday, April 18, 2026
No menu items!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன

மீண்டும் இணையும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்னாள் உறுப்பினர்கள்..!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியிலிருந்து விலகிய முன்னாள் உறுப்பினர்கள் குழுவொன்று எதிர்வரும் வாரத்தில் மீள அக்கட்சியில் இணையவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதன்படி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முன்னாள் இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளடங்கலாக சுமார் 25 பேர் இவ்வாறு மீள கட்சியில் இணையவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின்...

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தமது அணிக்கு சவால் கிடையாது – ரஞ்சித் மத்தும பண்டார..!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தமது அணிக்கு சவால் கிடையாது எனவும், கூட்டணி அமைப்பது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் மாத்திரமே தற்போது பேச்சு நடத்தப்பட்டுவருகின்றது எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். ”அனைவருக்கும் அரசியல் செய்யும் உரிமை இருக்கின்றது. அந்தவகையில் மொட்டு கட்சி செயல்படுகின்றது. அவர்களின் நடவடிக்கை எமக்கு...

சுஜீவ சேனசிங்கவுக்கு இழப்பீட்டை வழங்குமாறு உத்தரவு..!

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்கவுக்கு 250 மில்லியன் ரூபாய் இழப்பீட்டை வழங்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சி.பி. ரத்நாயக்கவிற்கு நீதிமன்றம் இன்று (05) உத்தரவிட்டுள்ளது. கல்கிஸ்ஸை மாவட்ட நீதிமன்றம் இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பான தொலைக்காட்சி விவாதத்தின் போது, ​​ஐக்கிய மக்கள்...

யு.எஸ்.எய்ட் திட்டங்கள் தொடர்பில் அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுத்த நாமல்!

யு.எஸ்.எய்ட் என்ற சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகத்தில் கீழ் இலங்கையில் செயற்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் உதவிகள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளுமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார். தனது எக்ஸ் பக்கத்தில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். யுஎஸ்.எய்ட் அமைப்பின் நிதியிலிருந்து பயனடைந்த அரச சார்பற்ற நிறுவனங்களின் கணக்குகள் உள்ளிட்ட விடயங்கள்...

மஹிந்த உத்தியோகபூர்வ இல்லத்தை காலி செய்யத் தயார் – சாகர காரியவசம்..!

அரசாங்கம் உத்தியோகபூர்வ அறிவித்தல் விடுத்தால், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது உத்தியோகபூர்வ இல்லத்தை காலி செய்யத் தயார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். சாகரவின் கூற்றுப்படி, உத்தியோகபூர்வ இல்லம் ராஜபக்சவுக்கு யஹபாலன அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்டது, மேலும் அவர் வெளியேறுவதற்கான எந்தவொரு கோரிக்கையும் முறையான அறிவிப்பின் மூலம்...

பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால மீது மனு தாக்கல்!

பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை செல்லுபடியற்றதாக்க உத்தரவிடக் கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிர்வாகச் செயலாளர் ரேணுகா பெரேரா சமர்ப்பித்தார். அமைச்சர் ஆனந்த விஜேபால, நாடாளுமன்ற செயலாளர் நாயகம் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.   <!-- -->

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரசார நடவடிக்கைகள் ஆரம்பம்..!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரசார நடவடிக்கைகள் இன்று முதல் தொடங்குகின்றன. இதன்படி குறித்த பிரசார நடவடிக்கைகளை அனுராதபுரம் - நொச்சியாகம பகுதியில் இன்று ஆரம்பமாகவுள்ளது. இந்த நிகழ்ச்சித்திட்டத்திற்கு "நாமலுடன் கிராமம் கிராமமாக" என்று பெயரிடப்பட்டுள்ளதாக இலங்கை பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.

SLPP பிரதிநிதிகளுடன் மஹிந்த ராஜபக்ஷ சந்திப்பு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதிநிதிகளுக்கும் இடையில் நேற்று விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. கொழும்பு விஜேராம வீதியிலுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போது, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களும், சிலிண்டர் சின்னத்தில் கடந்த பொதுத்தேர்தலில் தேர்தலில் போட்டியிட்ட சிலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்த...

பொதுஜன பெரமுனவின் பிரச்சார நடவடிக்கைகள் ஒத்திவைப்பு..!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரச்சார நடவடிக்கைகள் அடுத்த மாதம் 2ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. பிரச்சார நடவடிக்கைகளை அனுராதபுரத்தில் இன்று ஆரம்பிப்பதற்கு முன்னதாக திட்டமிடப்பட்டிருந்தது. இருப்பினும், நிலவும் பாதகமான காலநிலையை கருத்திற் கொண்டு பிரச்சாரத்தைத் தொடங்குவது பொருத்தமானதல்ல என்று கட்சிப் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். கட்சிப் பிரதிநிதிகளின் கருத்துக்களின் அடிப்படையிலேயே இந்த முடிவு எட்டப்பட்டதாக...

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்த  SLPP!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) தேசிய அமைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தலைமையில் நாளை (25) அனுராதபுரத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பிக்கவுள்ளது. ஜய ஸ்ரீ மஹா போதி மற்றும் ருவன்வெலிசேயாவில் சமய அனுஷ்டானங்களுடன் பிரச்சாரம் ஆரம்பமாகிறது, அதன் பின்னர் வணக்கத்திற்குரிய பல்லேகம ஹேமரத்தன தேரரை சந்திக்கும். கட்சியின் திட்டங்களைக் கோடிட்டுக் காட்டவும், ஆதரவைப்...
- Advertisement -spot_img

Latest News

டீசல் ஒரு பெரலுக்கு 286 டொலர்கள் செலுத்தப்பட்டது; பெட்ரோலிய கூட்டுத்தாபனம்

டீசல் ஒரு பெரலுக்கு $286 செலுத்தியதாக ஏற்று கொண்டுள்ள இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம், இது சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளுக்கு இயல்பான விலையாகும் எனவும் அதிக விலை நிர்ணயம்...
- Advertisement -spot_img