Saturday, November 21, 2026
No menu items!

#politics #government #elections #democracy #politicalissues #publicpolicy #politicaldebate #politicalnews #politicalanalysis #politicalcommentary

மின்சார கட்டணம் குறைக்கப்படும்; ஜனாதிபதி…!

மின்சார கட்டணத்தை 30 சதவீதத்திற்கு மேல் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். தம்புள்ளையில் இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தி பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில், கடந்த காலங்களில் நிலவிய குடும்ப அரசியல், ஊழல் அரசியல் முடிவுக் கொண்டுவரப்பட்டுள்ளது. பொதுத் தேர்தலின் பின்னர் நாட்டை சுத்தப்படுத்துவோம். பொதுமக்களை...

வேட்பாளராக அநுர மேடையில் கூறியவைகளை நடத்திக் காட்டுவதில் தோல்வி கண்டுள்ளார்; சஜித் பிரேமதாச…

வேட்பாளராக அநுரகுமார திசாநாயக்க மேடையில் கூறியவைகளை நடத்திக் காட்டுவதில் தோல்வி கண்டுள்ளார் என்பதை அவரே நிரூபித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கெஸ்பேவ பகுதியில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். துறைமுகத்திலிருந்து ஒரு விலைக்கு எரிபொருள் இறக்கப்பட்டு, மற்றொரு விலைக்கு மக்களுக்கு விற்கப்படுகிறது. அதிக வரி, ஊழல், மோசடி,...

ஆசிய நாடுகளின் தேர்தல் ஆணைக்குழுக்களின் பிரதிநிதிகள் குழு நாளை இலங்கைக்கு விஜயம்…!

எதிர்வரும் வியாழக்கிழமை நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய அனைத்து பிரசார நடவடிக்கைகளும் நாளை நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளது. எனினும், வேட்பாளர்கள் அமைத்துள்ள தேர்தல் அலுவலகங்களை அகற்றுவதற்கு நாளை மறுதினம் நள்ளிரவு வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை, பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய குற்றங்கள் தொடர்பாக இதுவரை 2,348 முறைப்பாடுகள் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அளிக்கப்பட்டுள்ளன. இதேவேளை, சர்வதேச கண்காணிப்பு அமைப்பின் பிரதிநிதிகளுக்கும்...

சுமந்திரன் ஜனாதிபதிக்கு பகிரங்க அழைப்பு…!

இலங்கை தமிழரசு கட்சியின் யாழ். சாவகச்சேரி தொகுதிக்கான இறுதி மாபெரும் தேர்தல் பிரசார கூட்டம் சாவகச்சேரி நகரில் நேற்று (09.11.2024) இடம் பெற்றது. ஜனாதிபதி அனுரவிற்கு நான் பகிரங்கமாக அழைப்பு விடுக்கிறேன். நீங்கள் கூறும் லெனினிச கொள்கையின் அடிப்படையில் ஒரு இனத்திற்கு சுய நிர்ணய உரிமை உண்டு. அதை நாங்கள் கோருகிறோம். அந்த மாற்றத்தின் பங்காளிகளாக...

பொதுத் தேர்தலில் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ள 50 வெளிநாட்டு தேர்தல் கண்காணிப்பாளர்கள்…!

எதிர்வரும் பொதுத் தேர்தலில் சுமார் 50 வெளிநாட்டு தேர்தல் கண்காணிப்பாளர்கள் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் கண்காணிப்பாளர்கள் இலங்கைக்கு ஏற்கனவே வருகைத் தந்துள்ளதை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க உறுதிப்படுத்தியுள்ளார். சுதந்திரமான தேர்தலுக்காக ஆசிய வலையமைப்பில் இருந்து தேர்தல் கண்காணிப்பாளர்கள் எதிர்வரும் நாட்களில் வருகைத்தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தேர்தல் ஆணைக்குழுவின் அழைப்பிற்கமைய...

வாக்காளர்கள் மற்றும் தேர்தல் வேட்பாளர்கள் தொடர்பில் ஆராய வேண்டும்; பஃப்ரல் அமைப்பு…!

இலங்கையில் எதிர்வரும் 14ஆம் திகதி இடம்பெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் இருப்பது மூன்று நாட்கள் மாத்திரமே. அதன்படி, வாக்குகளை வழங்கவுள்ள வாக்காளர்கள், தேர்தல் வேட்பாளர்கள் தொடர்பில் குறிப்பிட்ட நாட்களில் ஆராய வேண்டும் என பஃப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது. வரப்பிரசாதங்கள் அல்லது தற்காலிக சலுகைகள் தொடர்பில் சிந்திக்காது பொருத்தமான நபர்களை நாடாளுமன்றத்திற்கு அனுப்பும் நோக்கில் வாக்காளர்கள் செயற்பட வேண்டும்...

தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள விசேட வர்த்தமானி அறிவித்தல்…!

எல்பிட்டிய பிரதேச சபையின் தலைவர் மற்றும் உப தலைவரை அறிவிக்கும் விசேட வர்த்தமானி அறிவித்தலை தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. எல்பிட்டிய பிரதேச சபையின் தவிசாளராக கொழம்ப தந்திரிகே நிஷாந்த பெரேராவை தெரிவு செய்து தேர்தல் ஆணைக்குழு வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது. அதன் உப தவிசாளராக வகொட பத்திரகே சுமித் சந்தன்  தெரிவு செய்யப்பட்டதாக வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுத் தேர்தல் வேட்பாளர்கள் 11 பேர் கைது…!

தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் இதுவரை 11 பொதுத் தேர்தல் வேட்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். வெள்ளிக்கிழமை (08.11.2024) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் இதுவரை 364 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் ...

பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய முறைப்பாடுகளின் எண்ணிக்கை அதிகரிப்பு…!

பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய முறைப்பாடுகளின் எண்ணிக்கை 2088 ஆக அதிகரித்துள்ளது. தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 475 முறைப்பாடுகளும் மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 1613 முறைப்பாடுகளும் 35 ஏனைய முறைப்பாடுகளும் கிடைத்துள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 149 முறைப்பாடுகள் பதிவாகியுள்ள நிலையில், தேர்தல் குறித்த வன்முறை சம்பவம் 1 பதிவாகியுள்ளதாகவும் தேர்தல்...

பிரமிட் வகை நிறுவனத்தில் பண மோசடியில் ஈடுபட்ட தம்பதிக்கு விளக்கமறியல்…!

பிரமிட் வகை நிறுவனம் ஒன்றில் முதலீடு செய்யப்பட்ட 1,800 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பணத்தை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவர் மற்றும் அவரது மனைவி ஆகியோரை எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இந்த சந்தேக...
- Advertisement -spot_img

Latest News

தமிழரசு கட்சி வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க தீர்மானம்!

இலங்கை தமிழரசு கட்சி 2027 வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கு எதிராக வாக்களிக்க தீர்மானித்துள்ளது. இன்று (20) பாராளுமன்றத்தில் உரையாற்றிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரன்...
- Advertisement -spot_img