இலங்கை தமிழரசு கட்சியின் யாழ். சாவகச்சேரி தொகுதிக்கான இறுதி மாபெரும் தேர்தல் பிரசார கூட்டம் சாவகச்சேரி நகரில் நேற்று (09.11.2024) இடம் பெற்றது.
ஜனாதிபதி அனுரவிற்கு நான் பகிரங்கமாக அழைப்பு விடுக்கிறேன். நீங்கள் கூறும் லெனினிச கொள்கையின் அடிப்படையில் ஒரு இனத்திற்கு சுய நிர்ணய உரிமை உண்டு. அதை நாங்கள் கோருகிறோம். அந்த மாற்றத்தின் பங்காளிகளாக நீங்கள் வாருங்கள்.
கடந்த ஒரு மாத காலமாக தடுமாற்றம், அதை விடுத்து வாருங்கள். கைகோர்ப்போம், சேர்ந்து பயணிப்போம். அதற்காக அமைச்சர் பதவி தேவையில்லை, அது தூசி.
யாழ்ப்பாணத்தில் நீங்கள் நடாத்திய தொழிலாளர் தினத்தில் சிவப்புச்சட்டை அணிந்து உங்களோடு கைகோர்த்து வந்தேன். அப்போது நீங்கள் ஜனாதிபதியாக வருவீர்கள் என்று எனக்குத் தெரியாது தானே.
தமிழரது வாக்குகளை சிதறடிக்க முன்னர் புலனாய்வாளர்கள் சுயேச்சை குழுக்களை இறக்கினார்கள், தற்போது புலம்பெயர் மாவியாக்கள் சுயேட்சை குழுக்களை நியமிக்கிறார்கள்.












