Sunday, April 19, 2026
No menu items!

#politics #government #elections #democracy #politicalissues #publicpolicy #politicaldebate #politicalnews #politicalanalysis #politicalcommentary

வேட்புமனுக்களை இரத்து செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம்..!

2023ஆம் ஆண்டு நடத்த திட்டமிடப்பட்டிருந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை இரத்து செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இதேவேளை, புதிய வேட்புமனுக்களை கோருவதற்கு அனுமதிக்கும் வகையில் உள்ளூராட்சி சட்டத்தில் திருத்தம் செய்வதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

மதரஸா மாணவர்களின் சம்பவம் தொடர்பில் விசாரணையை நடத்த வேண்டும் – ரிஷாட் பதியுதீன்

சீரற்ற காலநிலையால் காரைதீவு - மாவடிப்பள்ளி வீதியில், உழவு இயந்திரம் கவிழ்ந்து, வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு,   உயிரிழந்த 8 மதரஸா மாணவர்களின் சம்பவம் தொடர்பில் சுயாதீனமான விசாரணையை நடத்த வேண்டும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் இன்றையதினம் (03)  நாடாளுமன்றில் வலியுறுத்தியுள்ளார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், “அம்பாறை...

அடுக்குமாடியில் இருந்து குதித்த அவுஸ்ரேலிய பிரஜை..!

அவுஸ்திரேலிய பிரஜை ஒருவர்  கொள்ளுப்பிட்டி கிரெஸ்கட் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து இன்றைய தினம்  செவ்வாய்க்கிழமை (03) குதித்து தன்னுயிரை மாய்த்துக்கு கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த நபர் 51 வயதுடையவர்  என   பொலிஸார் தெரிவிக்கின்றனர். இரட்டைக் குடியுரிமை பெற்ற வெளிநாட்டவர் கட்டிடத்தின் 7வது மாடியில் தற்காலிகமாக தங்கியிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கொள்ளுப்பிட்டி பொலிஸார்  மேற்கொண்டு...

இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள மெரிக்க உதவி இராஜாங்க செயலாளர்..!

தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் டொனால்ட் லு (Donald Lu) நாளை மறுதினம்(05) இலங்கை விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தியா, இலங்கை மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளுக்கான விஜயத்தின் ஒரு பகுதியாக அவரது இந்த விஜயம் அமையவுள்ளதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது. அமெரிக்க இலங்கை கூட்டு...

முதல் பாராளுமன்ற அமர்வில் நியமிக்கப்பட்டுள்ள எம்.பி.க்கள்..!

பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்விற்கான குழுவில் பணியாற்றுவதற்கு நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களை சபாநாயகர் கலாநிதி அசோக ரன்வல இன்று அறிவித்தார். இதன்படி, பாராளுமன்ற நிலையியற் கட்டளை 143இன் பிரகாரம் லக்ஷ்மன் நிபுன ஆராச்சி, இம்ரான் மஹரூப், ரோகினி குமாரி விஜேரத், ஷானகியன் ராஜபுத்திரன் ராசமாணிக்கம், கௌசல்யா ஆரியரத்ன, சேனா நாணயக்கார ,அன்புள்ள மதுகோடா, சஞ்சீவ ரணசிங்க ,அரவிந்த...

“தொழிலாளர்களின் தேசிய குறைந்தபட்ச ஊதியம் மசோதாவின் சான்றிதழை அங்கீகரித்த சபாநாயகர்..!

சபாநாயகர் கலாநிதி அசோக ரன்வல இலங்கையின் அரசியலமைப்பின் 79வது சரத்தின் விதிகளின் படி மூன்று சட்டமூலங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளார். பாராளுமன்ற அறிக்கையின்படி, சபாநாயகர் 11 செப்டம்பர் 2024 அன்று “தொழிலாளர்களின் தேசிய குறைந்தபட்ச ஊதியம் (திருத்தம்)” மசோதாவின் சான்றிதழை அங்கீகரித்தார். "பரஸ்பர அங்கீகாரம், பதிவு செய்தல் மற்றும் வெளிநாட்டு தீர்ப்புகளை அமல்படுத்துதல்" மற்றும் "குற்றவியல் நடைமுறைச் சட்டம் (திருத்தம்)"...

மக்கள் துணிச்சலான முடிவையும் எடுத்துள்ளனர் – ஹரிணி அமரசூரிய

இலங்கை நாடாளுமன்றத்தை அதிகளவு பிரதிநிதித்துவம் உள்ளதாகவும் அதிகளவு பச்சாதாபம் பரிவுள்ளதாக மக்கள் கோரும் விழுமியங்களை பிரதிபலிக்கும் இடமாகவும் மாற்றுவோம் என பிரதமர் ஹரிணி அமரசூரிய வேண்டுகோள் விடுத்துள்ளார். இன்றைய நாடாளுமன்ற உரையில் அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். தனது உரையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது எங்கள் மக்கள் எங்கள் பிரஜைகள் எங்களை வித்தியாசமானவர்களாக இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர். அவர்கள் துணிச்சலான...

இன்றைய தங்க விலையின் நிலவரம்..!

கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க நிலவரப்படி, 24 கரட் தங்கம் 209,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் 192,300 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒருகிராமின் விலை 36,250 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒருகிராமின் விலை 24,000 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

நாளை இரவு 9.30 மணி வரை நாடாளுமன்ற கூட்டத்தொடரை நடத்த தீர்மானம்..!

நாடாளுமன்ற கூட்டத்தொடரை  நாளை இரவு 9.30 மணி வரை நடத்துவதற்கு கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, கடந்த சில நாட்களாக நிலவிய மோசமான காலநிலையினால் ஏற்பட்ட அனர்த்த நிலைமை தொடர்பில் சபை ஒத்திவைப்பு மீதான விவாதத்தை நாளை மாலை 5.30 மணி தொடக்கம் இரவு 9.30 மணி வரை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல்...

பாடசாலை மாணவர்களுக்கு உதவித்தொகை..!

விசேட காரணங்களுக்காக மாற்றுத்திறனாளிகள் மற்றும் அனாதை இல்லங்களில் உள்ள மாணவர்களுக்கு பாடசாலை புத்தகங்களை கொள்வனவு செய்வதற்கு 6,000 ரூபா உதவித்தொகை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அடுத்த பாடசாலை தவணையில் இருந்து இந்த முடிவு அமுலுக்கு வரும் என தெரிவிக்கப்படுகின்றது. பிரதமரால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவைப் பிரேரணைக்கு நேற்று (02) அனுமதி கிடைத்ததாக ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரான அமைச்சர்...
- Advertisement -spot_img

Latest News

டீசல் ஒரு பெரலுக்கு 286 டொலர்கள் செலுத்தப்பட்டது; பெட்ரோலிய கூட்டுத்தாபனம்

டீசல் ஒரு பெரலுக்கு $286 செலுத்தியதாக ஏற்று கொண்டுள்ள இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம், இது சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளுக்கு இயல்பான விலையாகும் எனவும் அதிக விலை நிர்ணயம்...
- Advertisement -spot_img