Saturday, November 21, 2026
No menu items!

#politics #government #elections #democracy #politicalissues #publicpolicy #politicaldebate #politicalnews #politicalanalysis #politicalcommentary

நாட்டை தீக்கிரையாக்க எவருக்கும் இடமளிக்க முடியாது – ஆனந்த விஜேபால

நாளைய தினம் பாராளுமன்றத்தில் அண்மையில் கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இனவாதத்தை தூண்டி நாட்டை தீக்கிரையாக்க எவருக்கும் இடமளிக்கப்பட மாட்டாது எனவும் பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி ஊடகங்களை நசுக்குகிறது அரசாங்கம் – சஜித் பிரேமதாச

ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இல்லாதொழிப்பதாகக் கூறிய தற்போதைய அரசாங்கம், பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி ஊடகங்களை நசுக்குவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார். இன்று (03) பாராளுமன்றத்தில் உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், அரசாங்கத்திற்கு பெரும் ஆணையைப் பெறுவதற்கு சமூக ஊடகங்கள் உதவியதாகவும், ஆனால் ஆட்சிக்கு...

அதிகரிக்கவுள்ள அஸ்வெசும கொடுப்பனவுத் தொகை..!

அஸ்வெசும நலன்புரிக்கொடுப்பனவை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ் வறுமை நிலையில் உள்ள பயனாளர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஆளும் தரப்பின் பிரதம கொறடாவான அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அதன்படி, வறிய நிலையில் உள்ள பயனாளர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவை 10,000 ரூபாவாகவும், மிக வறிய நிலையில் உள்ள பயனாளர்களுக்கு வழங்கப்படும்...

மட்டக்களப்பில் இடம் பெற்ற அனர்த்த முகாமைத்துவ குழு கூட்டத்தில் மணல் அகழ்விற்கு தற்காலிக தடை!!

மட்டக்களப்பு மாவட்டத்தில் செங்கலடி பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் அதிகமானோர் ஈடுபடுவதனால் வயல் நிலங்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. எனவே தற்காலிகமாக குறித்த பகுதிக்கான மணல் அகழ்வு அனுமதிப்பத்திரங்களை இடைநிறுத்தி வைப்பதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தி பிரதியமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவருமான அருண் ஹேமசந்திர தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் ஐஸ்டினா முரளிதரன் ஒருங்கிணைப்பில்...

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் – அருண ஜயசேகர

கடந்த சில நாட்களாக ஏற்பட்ட அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார். இன்றைய தினம் (03) பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர், அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதியும் பணிப்புரை வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். திறைசேரியில் இருந்து தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் வழங்குமாறு...

எரிவாயுவின் விலையில் திருத்தம்..!

டிசம்பர் மாத சமையல் எரிவாயுவின் விலை  திருத்தம் தொடர்பில் நாளை (04) அறிவிக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. உலக சந்தையில் தற்போது நிலவும் எரிவாயு விலையுடன் ஒப்பிட்டு இந்த ஆண்டு எரிவாயுவின் விலை திருத்தம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்போது உலக சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரித்துள்ளதாகவும், அதற்கேற்ப இந்த நாட்டில் எரிவாயு விலையில் அதிகரிப்பு ஏற்பட...

பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ள நிஹால் தல்துவ..!

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவ  பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதன்படி, புதிய பொலிஸ் ஊடகப் பேச்சாளராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கே.பி.மனதுங்க நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பொலிஸ் ஊடகப் பேச்சாளராக கடமையாற்றிய காலத்தில் ஊடகவியலாளர்கள் கேட்ட பல்வேறு சம்பவங்கள் தொடர்பில் தனக்குத் தெரியாது என பதிலளித்த பிரதி பொலிஸ் மா...

நாட்டில் அனைவரும் சமமானவர்கள் என்றால் புத்த மத்திற்கு இருக்கும் முன்னுரிமையை ஏனை மதங்களுக்கும் வழங்கட்டும் — ஜேவிபிக்கு மு.நா.எம்பி கோ.கருணாகரம் சாவால்..!

13ம் திருத்த சட்டத்தை ஒழிக்கப் போகின்றோம் என்கின்ற ஜே.வி.பி இந்த நாட்டிலே புத்த மதத்திற்கு முன்னுரிமை இருப்பது போல  ஏனைய மதங்களுக்கும் கொடுத்து காட்டுங்கள் உங்களால் இயலும் என்றால் அதை முதலில் செய்யுங்கள் அதற்கு பிறகு இந்த நாட்டில் அனைவரும் சமமானவர்கள் என்பதை கூறுங்கள் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழவிடுதலை இயக்கத்தின்...

நாடளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமானம் செய்துகொண்ட மொஹமட் சாலி நளீம்..!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக மொஹமட் சாலி நளீம் இன்றைய தினம் (03) சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். சபாநாயகர் அசோக ரன்வல முன்னிலையில் அவர் இவ்வாறு சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

54 காவல்துறை அதிகாரிகளுக்கு இடமாற்றம்.!

பிரதி காவல்துறைமா அதிபர்கள், சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர்கள், காவல்துறை அத்தியட்சகர்கள் உள்ளிட்ட 54 பேருக்கு உடன் அமுலாகும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. தேசிய காவல்துறை ஆணைக்குழுவின் அனுமதிக்கமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பிரதி பணிப்பாளராகச் செயற்பட்ட மகளிர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் ஐ.எஸ் முதுமால அந்த...
- Advertisement -spot_img

Latest News

தமிழரசு கட்சி வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க தீர்மானம்!

இலங்கை தமிழரசு கட்சி 2027 வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கு எதிராக வாக்களிக்க தீர்மானித்துள்ளது. இன்று (20) பாராளுமன்றத்தில் உரையாற்றிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரன்...
- Advertisement -spot_img