Sunday, April 19, 2026
No menu items!

#politics #government #elections #democracy #politicalissues #publicpolicy #politicaldebate #politicalnews #politicalanalysis #politicalcommentary

பிணையில் விடுவிக்கப்பட்டார் கெலும் ஜயசுமன..!

பொதுமக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையிலான தகவல்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கெலும் ஜயசுமன பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கொழும்பு நீதவான் நீதிமன்றம் குறித்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. பேஸ்புக் ஊடாக வடக்கில் மாவீரர் வைபவங்கள் நடைபெறுவதாக பொய்யான தகவலை பரப்பிய சம்பவம் தொடர்பிலே விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் உள்நாட்டுக் கடன் தொகை அதிகரிப்பு..!

இலங்கையின் உள்நாட்டுக் கடன் மூன்றாம் காலாண்டில் 2.4 பில்லியன் அமெரிக்க டொலர்களால் அதிகரித்துள்ளது. அதன்படி, அரசாங்கம் உள்நாட்டுக் கடன் சந்தையில் தொடர்ந்து தங்கியிருப்பதால், மொத்த உள்நாட்டுக் கடன் சுமார் 60 பில்லியன் டொலராக அதிகரித்துள்ளதாக நிதி அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. நிதி அமைச்சினால் வெளியிடப்பட்ட மூன்றாம் காலாண்டுக்கான கடன் அறிக்கையின்படி, ஜூன் மாத இறுதியில் 57.4 பில்லியன்...

இராமநாதன் அர்ச்சுனாவை தாக்கினாரா?சுஜித் சஞ்சய் பெரேரா..!!

சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவை எதிர்கட்சித் தலைவர் அலுவலகத்தில் வைத்து தாக்கியதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டை நிராகரிப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய் பெரேரா தெரிவித்துள்ளார். நேற்று (03) இடம்பெற்ற நாடாளுமன்ற கூட்டத் தொடருக்கு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

திடீரென அதிகரித்த மீன் விலைகள்..!

கடந்த காலங்களில் நிலவும் மோசமான வானிலை காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்லாததன்   காரணமாக மீன்களின் விலைகள் அதிகரித்துள்ளதாக  வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். இதன்படி, ஒரு கிலோகிராம் சாலயா 400 முதல் 500 ரூபாவாகவும், தலபத் 3,000 ரூபாவாகவும், கெலவல்லா 1,400 ரூபாவாகவும், இறால் 1,800 ரூபாவாகவும் சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இரண்டு வாரங்களில் அரிசிக்கு தட்டுப்பாடு..!

அரிசியை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால்,எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள்  அரிசிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும் என அகில இலங்கை சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு நீண்டகால வேலைத்திட்டத்தை தயாரிப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என சங்கத்தின் தலைவர் யு. கே. சேமசிங்க குறிப்பிட்டுள்ளார். “நாம் நீண்ட கால தீர்வைக் காண...

இ-பாஸ்போர்ட் குறித்து வெளியான தகவல்..!

கடந்த அரசாங்கத்தின் போது குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு 05 மில்லியன் இலத்திரனியல் கடவுச்சீட்டு கொள்வனவுக்கான விலைமனு வழங்கப்பட்ட விதம் தொடர்பில் தேசிய கொள்முதல் குழு விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார். குறித்த வௌிநாட்டு கடவுச்சீட்டுக் கொள்வனவு தொடர்பான விலைமனு வழங்கப்பட்ட விதத்தை சவாலுக்குட்படுத்தி எபிக் லங்கா பிரைவேட் நிறுவனம்...

இந்திய மீனவர்களை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திய வெளிவிவகார அமைச்சருக்கு கடிதம்..!

யாழ்ப்பாணம் - சுண்டிக்குளம் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 18 இந்திய மீனவர்களை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரி, புதுச்சேரி முதலமைச்சர் என்.ரங்கசாமி, இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் குறித்த 18 இந்திய மீனவர்களும் இலங்கை கடற்படையினரால் நேற்றையதினம் (03)கைது செய்யப்பட்டனர். அதன்போது, மீன்பிடி படகொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாகக் கடற்படை பேச்சாளர்...

சபை ஒத்திவைப்பு விவாதம் இரவு 09.30 மணிவரை..!

நாட்டில்  நிலவிய மோசமான காலநிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்த நிலைமைகள் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதம் இன்று புதன்கிழமை (4) மாலை. 05.30 மணிமுதல் இரவு 09.30 மணிவரை நடைபெறவுள்ளது. சபாநாயகர் அசோக ரன்வல தலைமையில் செவ்வாய்க்கிழமை (03) அன்று நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இத் தீர்மானம் எடுக்கப்பட்டது. இதன்படி, முன்னர் தீர்மானிக்கப்பட்டபடி, ஜனாதிபதியினால் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட...

இன்று முதல் மீண்டும் பரீட்சைகள் ஆரம்பம்..!

சீரற்ற காலநிலை காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைகள் இன்று(04) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. வெள்ளப் பெருக்கு உள்ளிட்ட அனர்த்த நிலைமைகளைக் கருத்திற் கொண்டு கடந்த நவம்பர் 27 ஆம் திகதி முதல் 6 நாட்களுக்குக் கல்விப் பொதுத் தராதர உயர் தரப்பரீட்சைகள் ஒத்திவைக்கப்பட்டிருந்தன. இந்தநிலையில் இன்று முதல் மீண்டும் பரீட்சைகள் இடம்பெறும்...

அபிவிருத்தி உத்தியோகஸ்தர்களின் பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வு பெற்றுக்கொடுப்போம்-பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க..!

அபிவிருத்தி உத்தியோகஸ்தர்களின் பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வு பெற்றுக்கொடுப்போம் கடந்த அரசாங்கம்  செய்த தவறை செய்வதற்காக மக்கள் எம்மை தெரிவு செய்யவில்லை. என தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் (03) செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற்ற ஜனாதிபதியின் கொள்கை பிரகடனம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர், ஆசிரியர் - அதிபர் சேவையில் காணப்படும் ...
- Advertisement -spot_img

Latest News

டீசல் ஒரு பெரலுக்கு 286 டொலர்கள் செலுத்தப்பட்டது; பெட்ரோலிய கூட்டுத்தாபனம்

டீசல் ஒரு பெரலுக்கு $286 செலுத்தியதாக ஏற்று கொண்டுள்ள இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம், இது சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளுக்கு இயல்பான விலையாகும் எனவும் அதிக விலை நிர்ணயம்...
- Advertisement -spot_img