தற்போது பெய்துவரும் கனமழையால் நீர் மின் உற்பத்தி 40 வீதத்தால் அதிகரித்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்தார்.
மேலும் இது தொடர்பில் மழையுடனான வானிலை ஆரம்பமாகுவதற்கு முன்னர் நீர் மின் உற்பத்தியானது 20 சதவீதமாகவே காணப்பட்டதாகவும் , 39 வீதமாக காணப்பட்ட நீர்த்தேக்கங்களின் நீர் கொள்ளளவு, தற்போது 60 வீதமாக உயர்வடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பித்தக்கது.