December 9, 2025
அதிபர் தேர்தலில் களமிறங்கும் நாமல் ராஜபக்ச
News News Line Top இலங்கை அரசியல் புதிய செய்திகள்

அதிபர் தேர்தலில் களமிறங்கும் நாமல் ராஜபக்ச

Jan 9, 2024

நாட்டைப் பாதுகாக்கும் சவாலை ஏற்றுக்கொள்ளத் தயார் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச நேற்று சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியளாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிக்கையில் , சிறிலங்கா பொதுஜன பெரமுன என்ற வகையில் எந்த தேர்தலுக்கும் நாம் தயார்.

சிறிலங்கா பொதுஜன பெரமுனவை பலமான அரசியல் சக்தியாக பலப்படுத்தும் வேலைத்திட்டம் தற்போது நடைமுறைபடுத்தப்பட்டு வருகின்றது.

எமது கட்சியில்  இருந்து எவரும் வெளியேறவில்லை. ஆனால் எங்களுடன் கூட்டணியில் இருந்த சில அரசியல் கட்சிகள் தங்கள் சொந்த நலனுக்காக கூட்டணியை மாற்றிக்கொண்டன.

எல்லோராலும்  சாத்தியமற்ற வாக்குறுதிகளை வழங்க முடியும். விசித்திரக் கதைகளைச் சொல்லமுடியும். 10,000 ரூபா சம்பளத்தை அதிகரிப்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்தது நல்லாட்சி அரசாங்கம். வந்து சில நாட்களில், 10,000 ரூபா உயர்த்தியதால் சிக்கலில் மாட்டிக் கொண்டது.

அதிபர் ரணில் விக்ரமசிங்க நல்லாட்சி அரசாங்கத்தை பொறுப்பேற்ற போது 2020 ஆம் ஆண்டளவில் நாடு கடனில் இருந்து விடுபடும் என்று கூறிய அவர் இன்றும் கடனை மறுசீரமைத்து வருகின்றார்.

​​அடிமட்டத்தில் சொல்லப்பட்டதை அரசியல் யதார்த்தமாக்கிய அரசியல் சக்தியாக  மகிந்த ராஜபக்ச தலைமையிலான சிறிலங்கா பொதுஜன பெரமுன அரசு விளங்குகிறது.

இந்த நாட்டை கட்டியெழுப்ப தேவையான வேலைத்திட்டம் கொண்ட அரசியல் சக்தியை கட்டியெழுப்புவது இளம் தலைவர்களாகிய எமது பொறுப்பாகும்.” எனவும், தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *