அநுராதபுரம், கல்கிரியாகம பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி சிறுவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கல்கிரியாகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பசிந்து காஞ்சன பண்டார என்ற 17 வயதுடைய சிறுவனொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த சிறுவனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக தம்புள்ளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிரியாகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here