November 18, 2025
புதிதாக புனரமைப்பு செய்யப்பட்ட புகையிரத பாதை மக்களிடம் கையளிப்பு!
புதிய செய்திகள்

புதிதாக புனரமைப்பு செய்யப்பட்ட புகையிரத பாதை மக்களிடம் கையளிப்பு!

Jun 18, 2024

அனுராதபுரத்திலிருந்து மிஹிந்தலை சந்தி வரையான புகையிரத பாதை புதிதாக புனரமைப்பு செய்யப்பட்டது.

இவ் பாதையானது நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தனவினால் நேற்றைய தினம்  மக்களிடம் கையளிக்கப்பட்டது.

வடக்கு ரயில் பாதை புனரமைப்பில் இந்திய அரசின் கடனுதவியின் கீழ் இங்கு நிர்மாணிக்கப்பட்ட   இந்த ரயில் பாதையில் இரண்டு பாலங்கள் அடங்கும்.

மிஹிந்தலை,  ரயில் நிலையம், மிஹிந்தலை சந்தி  நிலையம், சமகிபுர மற்றும் அசோகபுர ரயில் நிலையங்கள் இந்த ரயில் பாதையில் அடங்கும்.

புதிதாக சீரமைக்கப்பட்ட அனுராதபுரத்திலிருந்து மிஹிந்தலை சந்தி வரையிலான புகையிரத பாதையின் தூரம் 11KM  ஆகும்.

அனுராதபுரம் புகையிரத நிலையத்தில் இடம்பெற்ற அங்குரார்ப்பண நிகழ்வின் பின்னர் விசேட நினைவுப் பலகையை திரைநீக்கம் செய்த அமைச்சர் மற்றும் அதிதிகள் அனுராதபுரத்திலிருந்து மிஹிந்தலை வரையிலான புதிய புகையிரத பாதையின் அங்குரார்ப்பண பயணத்திலும் இணைந்துகொண்டனர்.

இதில் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் ரஞ்சித் ரூபசிங்க, ரயில்வேயின் பதில் பொது முகாமையாளர் எஸ்.  எஸ்.  முதலிகே, முன்னாள் அமைச்சர் எச்.பி சேமசிங்க, வடமத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் எஸ்.  எம்.  ரஞ்சித் சமரகோன், புகையிரத திணைக்களத்தின் பிரதிப் பொது முகாமையாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள், பிரதேச அரச அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டுள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *