Tamil News Channel

இலங்கையில் 2024 ஜனாதிபதி தேர்தல் – இலங்கை அமெரிக்க தூதுவர் ஜூலி சங் நம்பிக்கை

julie chung

உரியநேரத்தில் தேர்தல்கள் இடம்பெறுவது ஜனநாயகத்திற்கு மிக அவசியமான விடயம் ஆகும்.

இதனால் இலங்கையில் அடுத்த வருடம் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இலங்கையின் அரசமைப்பின்படி ஏனைய தேர்தல்களும் இடம்பெறும் என அமெரிக்கா நம்பிக்கை கொண்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்தவருடம் நடைபெறவேண்டிய தேர்தல்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கின்றோம், எனவும் சுதந்திரமான நியாயமான தேர்தல் இடம்பெறுவதை எதிர்பார்த்துள்ளோம்,எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவை , அனைத்தும் மக்களிற்கான குரல்களை வழங்கும் அவர்கள் வாக்களிப்பின் மூலம் தங்கள் கருத்துக்களை வெளியிடமுடியும் தங்கள் தலைமையை தெரிவு செய்ய முடியும் என அமெரிக்க தூதுவர் தெரிவித்துள்ளார்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts