இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் தளபதி பலியாகியுள்ளதாக லெபனான் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த வாரம் பெய்ரூட்டில் நடத்திய தாக்குதலில் ஹமாஸின் துணை தலைவர் உயிரிழந்தார்.

இச் சம்பவத்துக்கு இரண்டு நாட்களுக்குப் பின் ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேலின் ராணுவ நிலையங்கள் மீது ஏவுகணை தாக்குதலைத் தீவிரப்படுத்தியது.

இவ் வேளையில் ஹிஸ்புல்லா தளபதி பயணித்த கார் மீது இஸ்ரேலின் போர் விமானம் குண்டுத்தாக்குதல் நடத்தியுள்ளது.

இது குறித்து ஹிஸ்புல்லா தரப்பில் எதுவும் தெரிவிக்கப்படாத நிலையில் தெற்கு லெபனானில் உள்ள ஹிஸ்புல்லாவின் கட்டுமானங்கள் தாக்கப்பட்டதாகத் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here