November 13, 2025
இஸ்ரேலுக்கு சர்வதேச நீதிமன்றம் அதிரடி உத்தரவு
News News Line Top Updates புதிய செய்திகள்

இஸ்ரேலுக்கு சர்வதேச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Jan 27, 2024

இஸ்ரேலுக்கு எதிராக தென்னாபிரிக்காவினால் பதிவு செய்யப்பட்ட இனப்படுகொலை வழக்கிற்கு சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

குறித்த வழக்கானது, இன்று(26) சர்வதேச நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளதுடன்  காசா மீதான தாக்குதலில் இனப்படுகொலை செய்ததாக தென்னாபிரிக்கா இஸ்ரேல் மீது வழக்குத் தாக்கல் செய்துள்ளது.

இந்நிலையில், காசாவில் இஸ்ரேல் நடத்தும் போரில் இனப் பேரழிவு தொடர்பான உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் அமைப்பின் சர்வதேச நீதிமன்றம் இஸ்ரேலுக்கு தீர்ப்பளித்துள்ளது.

அத்தோடு, பலஸ்தீனர்களுக்கு இனப் பேரழிவு நடவடிக்கைகளின் போது தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் உரிமை இருப்பதாகவும் சர்வதேச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேலும், இனப் பேரழிவுக்கு எதிரான சட்டத்தின் கீழ் அவர்கள் பாதுகாக்கப்பட வேண்டிய பிரிவினர் என்றும் சர்வதேச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *