Tamil News Channel

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை  பெண்ணுக்கு ‘இதயம்’ கொடுத்த இந்தியா..!

பாகிஸ்தானின் கராச்சியைச் சேர்ந்த ஆயிஷா ரஷான் என்ற 19 வயதுப் பெண்ணுக்கு சென்னையில் உள்ள எம்.ஜி.எம் மருத்துவமனையில் இதய மாற்று அறுசை சிகிச்சை நடந்துள்ளது.

சிறுவயதிலிருந்தே குறித்த பெண்ணுக்கு இதய பாதிப்பு இருந்து வந்த நிலையில், கடந்த 2019ஆம் ஆண்டு அதற்கான சிகிச்சையைப் பெற்றுக்கொள்வதற்காக இந்தியா சென்றுள்ளார். அப்போது இதயத்தின் இடது புறத்தில் இரத்தத்தை உந்தி தள்ளுவதற்கான சாதனம் பொருத்தப்பட்டது.

அதன் பின்னர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சிகிச்சைக்காக மீண்டும் இந்தியா வந்தபோது, அவரது இதயத்தின் வலது புறத்திலும் செயல்திறன் குறைந்திருந்ததை மருத்துவர்கள் கண்டறிந்தனர்.

இந்நிலையில் இதயம் மற்றும் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் கே.ஆர். பாலகிருஷ்ணன் மற்றும் இன்ஸ்டியூட்டின் இணை இயக்குநர் டாக்டர் சுரேஷ் ராவ் ஆகியோர் குறித்த பெண்ணின் அவசர நிலையை கருத்தில்கொண்டு உடனடியாக மாற்று இதயம் பெறுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த தேடலில் டெல்லியைச் சேர்ந்த 69 வயதான மூளைச்சாவு அடைந்த நோயாளியின் இருதயம் கிடைக்கப்பெற்று அதனை நல்ல முறையில் ஆயிஷாவுக்கு பொறுத்தியுள்ளனர் மருத்துவர்கள்.

இந்நிலையில் படிப்படியாக குணமடைந்த ஆயிஷா கடந்த வாரம் வீடு திரும்பியுள்ளார்.

ஆயிஷாவின் உயிரைக் காப்பாற்றிய மருத்துவர்களுக்கும் இந்திய அரசாங்கத்துக்கும் ஆயிஷாவும் அவரது தாயாரும் நன்றி கூறியதோடு, பாகிஸ்தானில் இதுபோன்ற மருத்துவ வசதிகள் இல்லையென்பதையும் சுட்டிக் காட்டினார்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts