ஜனாதிபதித் தேர்தலில் ஊடகவியலாளர்களின் கடமை மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான பயிற்சி வேலைத்திட்டம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

ஊடகவியலாளர்களின் வகிபங்கை அர்த்தமுள்ள வகையில் அதிகரிக்கச் செய்ய வியூ(VIEW) அமைப்பால் விசேட பயிற்சி வேலைத் திட்டம் வடக்கு ஊடகவியலாளர்களுக்கு முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாண மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று சனிக்கிழமை காலை 10 மணி தொடக்கம் நடைபெற்ற  இந்த வேலைத்திட்டத்தில் வியூ  அமைப்பின் ஆலோசனை சபை பிரதானியும் முன்னாள் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய மற்றும் வியூ அமைப்பின் ஆலோசனை சபை உறுப்பினரும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினருமான எம்.எம்.மொஹமட் ஆகியோர் தலைமை வளவாளர்களாகப் பங்கேற்றனர்.

மேலும் யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) ஶ்ரீமோகன் உள்ளிட்ட அதிகாரிகளும் ஊடகவியலாளர்களும் கலந்துகொண்டனர். என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here