எல்லை தாண்டி வரும் இந்திய மீனவர்களின் இழுவை மடிப்படகுகளின் அத்துமீறலை தடுத்துநிறுத்தக்கோரி வடக்கு மாகாணத்தை சேர்ந்த நான்கு மாவட்ட மீனவர்களும் இணைந்து ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த கடற்றொழிலாளர்கள் அமைப்பின் பிரதிநிதிகள் இன்று காலை யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் ஒன்றுகூடி கலந்துரையாடிய பின்னர் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இக் கலந்துரையாடலில் வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் செயலாளர்

முகமட் ஆலம், அகில இலங்கை தொழிலார் சமூகங்களின் கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளர் என்.வி.சுப்பிரமணியன், அகில இலங்கை மீனவர் மக்கள் தொழிற்சங்க வடமாகாண இணைப்பாளர் அன்னலிங்கம் அன்னராசா ஆகியோர் கலந்து சிறப்பித்துள்ளனர் என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here