கப்பல்களை தாக்கி அழிக்கக்கூடிய ஏவுகணைகளை வடகொரியா சோதனை செய்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. போர்க்கப்பலில் இருந்து குறித்த ஏவுகணைகள் ஏவப்பட்டு சோதனை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சுமார் 5000 டன் எடையுள்ள போர் கப்பலில் இருந்து அணுவாயுதம் மூலம் தாக்கி அழிக்க கூடிய திறன் கொண்ட இரண்டு அதிதவீத குரூஸ் ஏவுகணைகளும் கப்பல்களை தாக்கி அழிக்கும் மூன்று ஏவுகணைகளும் ஏவப்பட்டுள்ளன.
குறித்த ஏவுகணைகள் தொடர்ந்து இரண்டு மணி நேரத்திற்கு மேலாக வானில் பறந்து இலக்குகளை வெற்றிகரமாக தாக்கியதாக வடகொரிய அரச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. சோதனையை நேரில் பார்வையிட்ட வட கொரிய தலைவர் கிம் ஜான் உன் தனது கடற்படையில் அணு ஆயுத திறனை எல்லையற்ற வகையில் விரிவாக்கம் செய்யப் போவதாக தெரிவித்துள்ளார்.
மேற்காசியாவில் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் வடகொரியா திடீரென இவ்வாறு ஏவுகணைகளை பரிசோதனை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.








