கொழும்பு – வெல்லவாய வீதியில் திக்வெல்ல நகரத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தங்காலையிலிருந்து மாத்தறை நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று அதே திசையில் பயணித்த முச்சக்கரவண்டி மற்றும் பஸ் ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தின் போது மோட்டார் சைக்கிளை செலுத்தி சென்றவரும் பின்புறத்தில் அமர்ந்திருந்த பெண்ணொருவரும் படுகாயமடைந்துள்ள நிலையில் பதீகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் பின்புறத்தில் அமர்ந்திருந்த பெண் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் தங்காலை, சீனிமோதர பகுதியில் வசிக்கும் 49 வயதுடைய பெண் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதனையடுத்து, முச்சக்கரவண்டி சாரதியும் பஸ் சாரதியும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை திக்வெல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.








