January 13, 2026
சுற்றுலா வந்த பெண்ணுக்கு அதிர்ச்சி..!
News News Line Top Updates புதிய செய்திகள்

சுற்றுலா வந்த பெண்ணுக்கு அதிர்ச்சி..!

Apr 3, 2024

கனடாவில்  இருந்து இலங்கைக்கு சுற்றுலா வந்த பெண் ஒருவரை யானை தாக்கிய சம்பவம் ஒன்று நேற்றைய தினம்(02) பதிவாகியுள்ளது.

குறித்த பெண் சிகிரியாவில் சூரிய உதயத்தை காண்பதற்கு  சென்ற வேளை அவரை யானை தாக்கியுள்ளது.

அதனையடுத்து சுற்றுலா வழிகாட்டி தனது மோட்டார் சைக்கிளின் ஒலியை எழுப்பி பிரதான மின் விளக்கை பயன்படுத்தி காட்டு யானையை விரட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சிகிரியா சுற்றுலா பயணச்சீட்டு அலுவலகத்துக்கு அருகிலுள்ள காட்டுப்பகுதியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் யானையின் தாக்குதலுக்கு உள்ளான பெண் தம்புள்ளை  ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *