திட்டமிட்டபடி அரசியலமைப்பு ரீதியாக ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அதற்கமைய எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் வாரத்தில் வரும் சனிக்கிழமை தேர்தல் நடைபெறும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் அண்மையில் நியமிக்கப்பட்ட தனது அரசியல் அமைச்சரவைக்கும் ஜனாதிபதி இந்த விடயத்தை அறிவித்துள்ளதாக அரசாங்கத்தின் உள்ளக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை, நாடாளுமன்றத் தேர்தலை நடத்துமாறு மகிந்த தலைமையிலான கட்சி உட்பட எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here