2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதிடொனால்ட் ட்ரம்ப் போட்டியிட தடை விதிக்கப்பட்டுள்ளது.
தாக்குதல் சம்பவம் ஒன்றுடன் தொடர்பு இருப்பதன் காரணமாகவே இந்த தடையை விதித்து கொலராடோ (Colorado) உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இத்தீர்ப்பானது ஜனநாயகத்திற்கு எதிரானது என்றும் மேல்முறையீடு செய்யப்படும் என்றும் டொனால்ட் ட்ரம்ப் பிரச்சாரத்தின் போது தெரிவித்தார்.
இது போன்ற தடை விதிப்புக்காக நியு ஹம்ப்ஷயர், மின்னெசோட்டா மற்றும் மிச்சிகன் ஆகிய மாநிலங்களிலும் முயற்சிகள் எடுக்கப்பட்டதாக ஊடகங்கள் தெரிவித்தனர்.
இருப்பினும் இந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க அரசியலமைப்பின் 14 ஆவது திருத்தத்தின் 3 ஆவது பிரிவின் கீழ் இந்த அதிகாரம் நீதிமன்றத்திற்கு காணப்படுகின்றது.
இதன் அடிப்படையில் ஜனாதிபதி வேட்பாளரொருவர் இவ்வாறு தகுதி நீக்கம் செய்யப்படுவது இதுவே முதல் தடவையாகும் என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.