நேற்றையதினம் (19) துபாயில் நடைபெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான IPL தொடரின் ஏலத்தில் அவுஸ்திரேலிய அணியின் இரு வீரர்கள் சாதனை படைத்துள்ளனர்.
அவுஸ்திரேலிய அணியின் தலைவர் பெட் கம்மின்சை ஹைதராபாத் அணி 20 கோடி 50 இலட்சம் இந்திய ரூபாவிற்கு ஏலம் எடுத்தது.
IPL வரலாற்றில் மிக அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர் என்ற சாதனையை பெட் கம்மின்ஸ் பெற்று அடுத்த ஒரு மணி நேரத்தில் ஏலத்தில் பெயர் வாசிக்கப்பட மிட்சல் ஸ்டார்க் அந்த சாதனையை முறியடித்தார்.
அவுஸ்திரேலிய அணியின் வேக பந்து வீச்சாளரான மிட்சல் ஸ்டார்க் கொல்கத்தா அணியினால் 24 கோடி 75 இலட்சம் இந்திய ரூபாவிற்கு ஏலம் எடுக்கப்பட்டு இந்த சாதனையை முறியடித்து புதிய சாதனை படைத்தார்.
2023 ஆம் ஆண்டுக்கான IPL ஏலத்தில் பஞ்சாப் அணியினால் 18 கோடி 50 இலட்சம் இந்திய ரூபாவிற்கு ஏலம் எடுக்கப்பட்ட சாம் கர்ரன் இதற்கு முன்னர் இந்த சாதனைக்கு உரியவராக காணபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.