ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களுக்கு ஆர்வம் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் கவலை வெளியிட்டுள்ளார்.
கொழும்பில் நேற்று (07.06.2024) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு இவ்வாறு கருத்து வெளியிட்டார்.
ஜனாதிபதித் தேர்தலுக்காக பொது வேட்பாளர் ஒருவரை இதுவரை தெரிவுசெய்யவில்லை எனவும் குறிப்பிட்டார்.
வேட்பாளர் தெரிவின் போது வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள சகல தரப்பினரதும் கருத்துக்கள் பெற்றுக்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும், தமிழ் மக்கள் ஜனாதிபதித் தேர்தலில் ஆர்வம் காட்டாமை கவலை அளிப்பதாகவும் கூறினார்.
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக பொது வேட்பாளர் ஒருவரை தேர்வு செய்வது தொடர்பில் தமிழ் தரப்பால் இது வரை தீர்மானங்கள் எடுக்கப்படவில்லை.
பொது வேட்பாளர் ஒருவரை தேர்வு செய்வது குறித்து தமிழ் கட்சிகளிடையில் இணக்கபாடுகள் எட்டப்படாத இழுபறிநிலை காணப்படுகின்றது
இந்த நிலையில் ஊடகவியளாலர்களை சந்தித்த தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் இவ்வாறு கருத்து வெளியிட்டார்.