சிறுதானிய உற்பத்தியை அதிகரிக்க வலியுறுத்தி கிளிநொச்சியிலிருந்து மாங்குளம் ஒலுமடு வரை துவிச்சக்கரவண்டி விழிப்புணர்வு பயணம் நடைபெற்றுள்ளது.
உடல் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாத சிறுதானிய உற்பத்தியை அதிகரிக்க வலியுறுத்தி குறித்த துவிச்சக்கர வண்டி பயணம் இன்று காலை கிளிநொச்சி அம்மாச்சி உணவகத்திற்கு முன்பாக ஆரம்பித்து மாங்குளம் ஒலுமடுவில் உள்ள Kk இயற்கை முறை பண்ணையில் நிறைவடைந்தது.
குறித்த ஆரம்ப நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட பிரதி மாகாண விவசாயப்பணிப்பாளர் சூ.ஜெகதீஸ்வரி, கிளிநொச்சி மாவட்ட கமக்கார அமைப்புக்களின் சம்மேளன தலைவர் சு.யதீஸ்வரன் ,முருகானந்தா கல்லூரியின் முதல்வர் அ.பங்கயற்ச்செல்வன் ஆகியோர் ஆரம்பித்து வைத்தனர்.
இந்திரா குழுமத்தின் பணிப்பாளர் ம.ரஜீதன் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட குறித்த துவிச்சக்கர வண்டி பயணத்தில் யாழ்பல்கலைக்கழக கல்லூரி பண்ணை இயந்திரவியல் மாணவர்கள் என கலந்து கொண்டனர்.