December 9, 2025
தேர்தலில் ஆசிர்வாதம் பெற்ற வேட்பாளர் – முன்னாள் ஜனாதிபதியும்
Top Updates இலங்கை அரசியல் புதிய செய்திகள்

தேர்தலில் ஆசிர்வாதம் பெற்ற வேட்பாளர் – முன்னாள் ஜனாதிபதியும்

May 2, 2024

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆசிர்வாதம் பெற்ற வேட்பாளர் வெற்றியீட்டுவார் என முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

வெற்றி பெற்ற ஜனாதிபதி வேட்பாளர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து பயணத்தை மேற்கொள்வார் எனவும் மஹிந்த ராஜபக்ஷ கூறினார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இந்த மே பேரணியின் மூலம் தனது பலத்தை வெளிப்படுத்தியுள்ளதாகவும், போராடி வரும் பொதுஜன பெரமுன வலுவடைந்து வருவதை நாடு முழுவதிலுமிருந்து கேம்பல் பிட்டியவில் கூடிய மக்கள் நிரூபித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

பல வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சக்திகள் தம்மையும் தனது அணியினரையும் திருடர்கள் என அவதூறு செய்து நாட்டின் எதிர்காலத்தை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டாலும், மக்களின் அபிலாஷைகளுக்காக தான் அந்த சவால்களை எல்லாம் முறியடித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *