நாளை நடைபெறவுள்ள விவாசய விஞ்ஞான பாடத்தின் பரீட்சைகள்.
2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொது தராதர உயர்தரப் பரீட்சைகள் இம்மாதம் 4 ஆம் திகதி ஆரம்பமாகி இன்றுடன்(31) நிறைவடைகின்றது.
இந் நிலையில் கடந்த 08 ஆம் திகதி நடைபெறவிருந்த விவாசய விஞ்ஞானப்பாடத்தின் பகுதி 1 வினாத்தாளும் 10 ஆம் திகதி நடைபெறவிருந்த விவாசாய விஞ்ஞான பாடத்தின் பகுதி 2 வினாத்தாளும் சட்டவிரோதமாக வெளியானதன் காரணமாக பரீட்சைகள் நடைபெறாது ரத்து செய்யப்பட்டது.
அதற்கமைய இதற்கான பரீட்சைகள் நாளையதினம் நடைபெறவுள்ளது.
இதற்கான அனுமதி அட்டையை www.doenets.lk என்ற இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ள முடியும் என இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பரீட்சார்த்திகளுக்கான அனுமதி அட்டை ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது
![]()