மகும்புரவில் இருந்து காலி நோக்கி பயணித்த பஸ்ஸில் இருந்து ஹெரோயின் மற்றும் ஹேஷ் போதைப்பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களுடன் பஸ்ஸில் பயணித்த நபரொருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர் பதுளை, கனுபெலெல்ல போகஹ எல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடையவர் என்பதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.