யுக்ரைன் மற்றும் அமெரிக்க பிரதிநிதிகள் நேற்றைய தினம் எரிசக்தி வசதிகள் மற்றும் முக்கியமான உட்கட்டமைப்பைப் பாதுகாப்பதற்கான திட்டங்கள் குறித்து சவூதி அரேபியாவில் கலந்துரையாடியதாக யுக்ரைனின் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மூன்று ஆண்டுகால போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் இராஜதந்திர உந்துதலின் ஒரு பகுதியாக இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
இரண்டாம் உலக மகா யுத்தத்துக்கு பிறகு ஐரோப்பாவின் மிக மோசமான மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான வாய்ப்புகள் குறித்து அமெரிக்க விசேட தூதுவர் ஸ்டீவ் விட்காஃப் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில், போர் நிறுத்தம் தொடர்பில் ரஷ்ய மற்றும் யுக்ரைன் பிரதிநிதிகளிடையே இன்றைய தினம் முக்கிய கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.