முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷவை ஆட்சிக்குக் கொண்டு வர வாக்குத் திரட்டும் திட்டத்தை ஜே.வி.பி தரப்பினரே முன்னெடுத்தாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.

களுத்துறையில் இடம்பெற்ற மக்கள் அரண் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டை அழித்த திருடர்களை ஆட்சிக்குக் கொண்டு வருவதற்காக ஜே.வி.பியினர் செயற்பட்டாலும், அந்தத் திருடர்களுடன் இணைந்து பதவிகளை ஏற்றுக் கொள்ளத் தாம் ஒருபோதும் விரும்பவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here