மூதூர் – பஹ்ரியா நகர் கடற்பகுதியில் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில், சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளது.
இதனைக் கண்ட பிரதேச மக்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலை அடுத்து, சடலம் நேற்றைய தினம்(01) மீட்கப்பட்டுள்ளது.
மூதூர் -பஹ்ரியா பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என இணங்காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில், அவரது வயிற்றுப் பகுதியில் மண் மூடையொன்றும் கட்டப்பட்டிருந்ததாக தெரியவந்துள்ளது.
இந் நிலையில் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.