Tamil News Channel

மனித உரிமை டிப்ளோமா கற்கை நெறியை பூர்த்தி செய்த மாணவர்களிற்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு !

WhatsApp Image 2024-06-30 at 19.58.26_a80815d7

சட்டத்திற்கும் மனித உரிமைக்குமான நிலையத்தினால் மனித உரிமை டிப்ளோமா கற்கை நெறியை பூர்த்தி செய்த மாணவர்களிற்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி சபாலிங்கம் மண்டபத்தில் நேற்றைய தினம் நடைபெற்றது .

இந்நிகழ்வு சட்டத்திற்கும் மனித உரிமைக்குமான நிலையத்தின் பணிப்பாளர் சட்டதரணி அம்பிகா சிறீதரன் தலைமையில் இந் நிகழ்வு நடைபெற்றது.

வடக்கு மாகாண சபையின் பிரதம செயலாளர் எல். இளங்கோவன் அவர்களும் சிறப்பு விருந்தினராக ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி சொர்ணலிங்கம் தியாகேந்திரன் அவர்களும் யாழ் பல்கலைக்கழக சட்ட துறை கிரேஸ்ட விரிவுரையாளர் துஷானி சயந்தன் ஆகியோரும்  கெளரவ விருந்தினராக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை  உத்தியோகஸ்தர் க. ரஜீவன் ஆகியோர் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

கற்கை நெறியை பூர்த்தி செய்த மாணவர்களிற்கு மனித உரிமைகள் டிப்ளோமா சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கி மாணவர்களை கெளரவித்தனர்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts