Tamil News Channel

மன்னாரிலிருந்து கடத்த முயற்சித்த தங்கம் மீட்பு

gold bar

மன்னார் கடல் பகுதியில் படகு ஒன்றில் கடத்த முயற்சித்த தங்கக் கட்டிகள் மீட்கப்பட்டுள்ளன.

மன்னார் கடல் பகுதியில் இருந்து ராமேஸ்வரம் தீவு பகுதிக்கு சுமார் 8 கிலோ தங்கக் கட்டிகள் கடத்துவதற்கு முயற்சித்த போதே அவை மீட்கப்பட்டுள்ளதாக சுங்க கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சுங்க கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைவாகவே நேற்றையதினம் (29) இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ரோந்து பணியில் ஈடுபட்ட சுங்கத்துறை அதிகாரிகள் அதி வேகமாக வந்த படகை சந்தேகித்து நிறுத்த முற்பட்ட போது படகில் இருந்தவர்கள் படகை நிறுத்தாமல் சென்றுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் சந்தேகநபர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதையடுத்து அவர்கள் படகை விட்டு தப்பி ஓடியுள்ளனர் என சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts