முல்லைத்தீவில் உள்ள பகுதியொன்றில் நாயுடன் காட்டிற்குள் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் வெடியில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் ஒட்டுசுட்டான் மணவாளன் பட்டமுறிப்பு பகுதியில் நேற்று முன் தினம் (05) இடம்பெற்றுள்ளது.
தேன் எடுப்பதற்காக காட்டிற்கு தனது வளர்ப்பு நாயுடன் சென்ற போது சட்டவிரோத வெடிபொருள் வெடித்ததில் குறித்த குடும்பஸ்தர் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் உயிருக்கு போராடியுள்ளளார்.
இதன்போது, அவரது டைகர் எனப்படும் வளர்பு நாய் உறவினர்களிடம் வந்து தனது ஏஜமானின் ஆபத்து தொடர்பில் அசைவுகளை வெளிப்படுத்தியதை தொடர்ந்து உறவினர்களால் அவர் மீட்கப்பட்டுள்ளார்.
அதனைத் தொடர்ந்து அவரை மாங்குளம் ஆதார மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டு மேலதிக சிசிச்சைக்காக கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனை கொண்டுசெல்லப்பட்போது உயிரிழந்துள்ளார்.
மேலும் மணவாளன் பட்ட முறிப்பினை சேர்ந்த 7 பிள்ளைகளின் தந்தையான 66 அகவையுடை பழனி வடிவேல் என்பவரே இவ்வாறு உயரிழந்த்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.