யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவு உட்பட்ட ஆனந்தன் வடலி மூன்றாம் ஒழுங்கை கொழும்புத்துறையில் பெண் கொலை செய்யப்பட்டுள்ளார்.
மேற்படி சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது கணவன் மனைவிக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்கம் காரணமாக கணவனால் மனைவி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்
கொலை செய்யப்பட்டவர் ஒரு பிள்ளையின் தாயான 29 வயதுடைய திவிகரன் நிசானி என்பவராவார்.
இச்சம்பவம் தொடர்பாக கணவர் தேவராசா திவிகரன் என்பவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
சட்ட வைத்திய அதிகாரி DR செல்லையா பிரணவன் சம்பவ இடத்திற்கு வந்துசடலத்தை பார்வையிட்டார்.அத்துடன் யாழ்ப்பாணம் நீ தவான் நீதிமன்ற நீதவான் A.A. ஆனந்தராஜா சம்பவ இடத்திற்கு வந்து விசாரணைகளை மேற்கொண்டார்.என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.