யாழ்ப்பாணம் பருத்தித்துறை நகரசபையின் தவிசாளராக இறுதி காலத்தில் சில மாதங்கள் இருந்த வேலுப்பிள்ளை நவரத்தினராசா 11/07/2024 இன்றுஅதிகாலை யாழ்போதனாவைத்தியசாலைல் மரணமடைந்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
கடந்த 29/06/2024 அன்று முல்லைத்தீவு நோக்கி சென்று கொண்டிருந்த போது புளியம்பொக்கணைப் வீதியில் அமைக்கப்படுகின்ற பாலத்தின் பாதுகாப்பற்ற சமிஞ்சை ஒன்றின் வீதியில் மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளாகியது.
இந் நிலையில் அவர் கிளிநொச்சி பொது வைத்திய சாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 4:00 மணியளவில் மரணமடைந்துள்ளார்.
Post Views: 2